ரஸகுல்லா & ரஸமலாய்

தேதி: November 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. பால் - 5 லிட்டர்
2. சர்க்கரை - 1/2 கிலோ
3. விப்பிங் கிரீம் - 250 கிராம் (Whipping Cream)
4. ரவை - 1 தேக்கரண்டி
5. வினீகர் (அ) எலுமிச்சை சாரு - 5 (அ) 6 தேக்கரண்டி
6. ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
7. குங்குமப்பூ - சிறிது
8. பாதாம் பருப்பு - பொடியாக நறுக்கியது சிறிது


 

3 லிட்டர் பாலை கொதிக்க வைத்து அதில் வினீகர் (அ) எலுமிச்சை சாரு சேர்த்து திரிய வைக்கவும்.
அப்படியே 10 நிமிடம் இறக்கி வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும்.
குழாயில் தண்ணிர் திறந்து அதன் கீழ் இதை பிடிக்கவும். (பால் திரய சேர்க்கும் திரவியம் அலசிக்கொண்டு போவதர்காக)
இந்த துணி சுற்றிய திரட்டுப்பாலை அடி சமமாக இருக்கும் பாத்திரத்தை திருப்பி போட்டு அதன் மேல் வைத்து, மேலே கனமாக தண்ணீர் உள்ள பாத்திரம் ஒன்றை வைக்கவும். (தண்ணீர் சுத்தமாக வடிந்தால் தான் ரசகுல்லா ஸாப்ட்'ஆக வரும்)
இதை கைகளால் மிருதுவாக பிசையவும். (5 நிமிடம்)
இத்துடன் ரவை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் பிசையவும்.
இதை சிறு உருண்டைகளாக உருட்டவும். (இதை அப்படியே சர்க்கரை பாகில் போட்டு 15 நிமிடம் வேக விட்டு எடுத்தால் ரசகுல்லா).
ஓரம் விட்டுப்போகாமல் அதை சற்று கனமான தட்டய் போல் செய்து கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில்(உருண்டைகள் ஒன்றோடு ஒன்று இடிக்காமல் இருக்க) சர்க்கரை போட்டு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
கொதித்ததும், இந்த உருண்டைகளை போட்டு சரியாக 15 நிமிடம் மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும்.
மீதம் இருக்கும் பாலை சுன்ட காய்ச்சவும்.
சூடான பால் ஒரு குழிக்கரண்டி எடுத்து குங்குமப்பூ போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
காய்ச்சிய பாலில் சர்க்கரை பாகில் இருந்து எடுத்த ரசமலாய்களை போட்டு, ஏலக்காய் பொடி, விப்பிங் கிரீம் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு பாதாம் போட்டு, குங்குமப்பூ சேர்த்த பால் கலந்து குளிர்ந்ததும் பிரிட்ஜில் வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

wiping cream என்றால் என்ன?

சூப்பர் மார்கட்களில் கிடைக்கும். Nestle வைப்பிங் கிரீம் என கேளுங்கள். அது பாலில் இருந்து தயாரிக்கப்படும், ஒரு வகை கிரீம் தான். இதை தேக்கரண்டியால் லேசாக அடித்து கலப்பதால், பால் தண்ணியாக இல்லாமல் கிரீம் (thick) போன்ற தன்மை கிடைக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சதாலட்சுமி
நல்ல குறிப்பு. நானும் இப்படிதான் செய்வேன்.

சதாலட்சுமி

சிம்ப்ளி ரொம்ப நல்ல குறிப்பு.சுவை சூப்பர்.நான் கடையில் தான் சாப்பிட்டிருக்கேன்.வீட்ல செய்து சாப்பிட்டதில் ஒரு சந்தோஷம் வனி.

மிக்க நன்றி மேனகா. :) நான் இப்போ தான் பன்னீர் செய்து தொங்க விட்டுட்டு வந்திருக்கேன், போய் செய்யனும் நாளை பார்ட்டிக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ரஸகுலா ரொம்ப பிடிக்கும். விப்பிங் க்ரீமிற்கு பதில் வேறு என்ன உபயோகப்படுத்தலாம்?அதுவுமில்லாம குழாயில் தண்ணீர் திறந்துவிட்டு அலசினால், டேஸ்ட் எல்லாம் போய்விடாதா? பார்க்கலாம் நாளை செய்து பார்க்கிறேன்.

டேஸ்ட் போகாது கீதா. நீங்க அலசாம பண்ணா எலுமிச்சை, வினிகர் வாசம் போகாது. நாக்குல விரி விருன்னு இருக்கும். விப்பிங் கிரீம் ரசமலாய்க்கு தான் தேவை. ரசகுல்லாக்கு தேவையில்லையே. செய்துட்டு சொல்லுங்கோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா