தேதி: November 19, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும். சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.
சிக்கனுக்கு தேவையானவை:
பெரிய சிக்கன் துண்டுகள் – 7
உள்ளி – ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தந்தூரி மசாலாத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கறி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மயோனைஸ் - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறி சரக்குத் தூள் - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மரக்கறிக்கு தேவையானவை:
காரட் - 2
கத்தரிக்காய் – ஒன்று
வெங்காயம் - ஒன்று (பெரியது)
உருளைக்கிழங்கு – 2
பீன்ஸ் – சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி








Comments
பேக்ட் சிக்கன்
அன்பு விசா
சூப்பராக இருக்கும் போலிருக்கு..இதில் மயோனைஸ் எப்பொ சேர்ப்பது?
விசா சூப்பர்.
எனக்கு எப்பவும் சிக்கன் டிக்கா, தந்தூரி,ஃப்ரை பண்ண மசாலா ரெடி பண்ணினால் ,பேக் அல்லது ஃப்ரை பண்ணிய பின்பு பாத்திரத்தில் எப்பவும் மசாலா இருக்கும்.இதை என்ன செய்வது என்று யோசிப்பேன்.நல்ல ஐடியா,இனி அதில் வெஜிடபிள்ஸ் போட்டு பேக் பண்ணி கொடுத்திடலாம்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
விசா சூப்பர் சூப்பர்
ஆக விசா என் பசங்களுக்கு இந்த மாதிரி கொடுத்தா வாழ்த்தி வாழ்த்தி சாப்பிடுவாங்க சூப்பர் சூப்பர் சூப்பர்........
கண்டிப்பாக செய்து பார்க்கனும்
ஜலீலா
Jaleelakamal
ஹாய் விஷா
நல்ல ரெஸிப்பி நானும் ட்ரை பன்னுவேன்
சரிமா இதில் கறி சரக்கு தூள் என்றுள்ளீர்கள் அப்படின்ன என்ன?கொஞ்சம் விளக்குவீர்களா?
ஹாய் விசா,
ஹாய் விசா,
பார்த்தவுடன் சாப்பிடத் தூண்டுகிறது. இது நானும் வீட்டில் அடிக்கடி செய்வேன், தூள் வகையை மாற்றி மாற்றிப் போடுவேன். நல்ல குறிப்பு.
ஜலீலாக்கா, உங்கள் குறிப்புக்களுக்கு பதிலோ படமோ இன்னும் போடவில்லை, இன்று இரவாவது கொஞ்சம் அனுப்ப நேரம் கிடைக்க வேண்டும் என கடவுளைக்கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
வாவ்!!!
அருமையா இருக்கும் போல் இருக்கே கலர் புல்லா இருக்கு..வாழ்த்துகள் விசா
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
தாளிகா, ஆசியா உமர், ஜலீலா , ரஸியா, அதிரா, மர்ழியாநூஹு
ஹலோ தாளிகா, நன்றி :-) மற்றய மசாலாக்கள் சேர்க்கும் போதே மயோனைஸையும் சேர்க்கவும்.
ஹலோ ஆசியா உமர், நன்றி :-) சிக்கனோடு சேர்த்து செய்யும்போது வெஜிடபிள்ஸும் நல்ல சுவையாக இருக்கும். செய்து பாருங்கள்.
ஹலோ ஜலீலா, நன்றி :-) செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். என்னுடைய ஃபேவரிட் சிக்கன் ரெசிபி இதுதான் (எனக்கு தெரிந்தவற்றுக்குள் :-))
ஹலோ ரஸியா, சரக்குத்தூள் என்பது கொத்தமல்லி, மஞ்சள், சீரகம் etc பொடி செய்த கலவை (மிளகாய் சேர்க்காமல் என்று நினைக்கிறேன்). இதில் என்னென்ன , எந்த விகிதத்தில் சேர்ப்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இலங்கை கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை குழந்தை பெற்றவர்களுக்கு மீன், சிக்கன் கறிகளில் சேர்த்து கொடுப்பதுண்டு. இந்த ரெசிபியில் சரக்குத்தூள் அவசியம் அல்ல. அது சேர்க்காமலும் நான் செய்திருக்கிறேன், நன்றாகத்தான் இருந்தது.
ஹாய் அதிரா, நன்றி :-)
ஹாய் மர்ழியாநூஹு, நன்றி :-)
எல்லோரையும் பெயர் சொல்லியே அழைத்து விட்டேன், தயவு செய்து தப்பாக நினைத்துக்கொள்ளவேண்டாம்...மேடம் என்று போடும்போது தெரியாதவர்களிடம் கதைப்பது போன்று உள்ளது :-)வெகு விரைவில் உங்கள் எல்லோரையும் எப்படி அழைப்பது என்று தெரிந்து கொள்கிறேன்.
விசா
நல்ல குறிப்பு - விசா
ஹாய் விசா, உங்க குறிப்பு பார்க்கவே நல்லா இருக்கு. நல்ல பிரசண்டேஷன். நான் உருளைக்கிழங்கும், வெங்காயமும் மட்டும்தான் இப்படி மசாலாவில் பிரட்டி பேக் செய்திருக்கிறேன். இந்த ஐடியாவும் செஞ்சு பாத்துடணும். நீங்கள் காய்கறி நறுக்கி இருக்கும் விதமும் அழகாக இருக்கிறது. என் பாராட்டுக்கள்.
ஹாய் விசா
சதாலட்சுமி
பார்க்க ரொம்ப அழகாகவும் படங்கள் தெளிவாகவும் உள்ளது. செய்து பார்த்துட்டு பின்னுட்டம் அனுப்புகிரேன்.
சதாலட்சுமி
தேவா, சதாலட்சுமி
ஹலோ தேவா, நன்றிகள் :-)
ஹலோ சதாலட்சுமி, நன்றிகள் :-) செய்து பார்த்து எப்படி இருந்ததென்று சொல்லுங்கள்.
விசா
பேக்ட் சிக்கன்
அன்புள்ள இமா
காய் எவ்லோ நேரம் அவனில் வைக்க வேண்டும்.நேற்று இந்த பேக்ட் சிக்கன் செய்தேன்.நன்றாக இருந்தது.(நான் எப்பொதும் போல செய்யும் சிக்கன் செய்து நீங்கள் சொல்வது போல காய் வைத்தேன்.ஆனால் காய் சுருண்டது போல் ஆஹிவிட்டது .ரொம்ப நேரம் வைத்து விட்டேனா?வெங்காயம்,கேரட்,பீன்ஸ் வைத்தேன்.சிக்கன் வேகும் வரை வைத்தேன்.உங்கள் காய்கள் பார்க்க அழகா பிரஷ்சா இருக்கே.நான் செய்தது அப்படி இல்லை என்று படம் எடுக்காமல் விட்டு விட்டேன்.விளக்கம் தாருங்களேன்
அன்புடன் பர்வீன்.
ஹலோ பர்வீன்
ஹலோ பர்வீன்,
காய்களை கொஞ்சம் பெரிதாக வெட்டி போடுங்கள். இல்லையேல் சிக்கன் வைத்து ~30 நிமிடங்கள் களித்து காய்களை சேருங்கள். வேகவைக்கும் நேரம் என்பது அவரவர் விருப்பத்தை மற்றும் உபயோகிக்கும் பேக்கிங் பானை (baking pan)பொறுத்தது. நல்ல தடிப்பான அடி கொண்டதாக இருந்தால், வேகுவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும். நீங்கள் மறுமுறை செயும் போது காய்களை இன்னும் சிறிது நேரம் களித்து சேருங்கள்.
விசா
அன்புள்ள விசா
கேட்டதும் உடன் சந்தேகத்திர்க்கு பதில் தந்தது மிகுந்த சந்தோஷம்.நீங்க சொல்வது போல மீண்டும் நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.நான் தாமதமான பதில் தந்தமைக்கு மன்னிக்கவும் விசா.
அன்புடன் பர்வீன்.