பட்டி மன்றம் - 7

இனிய ஸ்னேகிதிகளே...
இந்த பட்டி மன்றத்திற்கு சுகன்யா பிரகாஷ் அழகிய,சுவாரஸ்யமான தலைப்பை தந்துள்ளார்.
"ஒரு குடும்பம் சிறப்படைய பெரிதும் காரணம் இல்லத்தரசிகளா?வேலைக்கு செல்லும் அரசிகளா?"
இது தான இந்த பட்டி மன்றத்தின் தலைப்பு.அறுசுவையில் வேலைக்கு செல்லும் அரசிகள்,இல்லத்தரசிகள் என கலந்து பவனி வருகின்றோம்.பலருக்கும் பல வித கருத்துக்கள் இருக்கலாம்.கடந்த பட்டி மன்ற வாதங்களை பார்க்கும் பொழுது அறுசுவை அரசிகளுக்கு இவ்வளவு வாததிறைமையா?என வியந்து போனேன்.
இந்த பட்டி மன்றத்திலும் உங்கள் பொன்னான வாதங்களை,கருத்துக்களை அள்ளித்தெளியுங்கள்.பட்டி மன்றத்தை சுவாரஸ்யமாக்குங்கள்.கலகலப்பாக்குங்கள்.அனைவரது கருத்துக்களையும் ஆவலுடன் எதிர் பார்கின்றேன்.
பிரியங்களுடன்,
ஸாதிகா

ஸ்னேகிதிகளே,பட்டிமன்றம் - 7 ஆரம்பமாகி விட்டது.வாருங்கள்.பதிவு போடுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்றைய காலத்தில் பெண்கள் வேலைக்குப் போவதை பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள்.இதில் என்ன பெருமை??பெண் என்பவள் திருமணத்தின் முன் பெற்றோரின் பாதுகாப்பிலும்,திருமணதின் பின் கணவனின் பாதுகாப்பிலும் இருப்பதுதான் அவளை சிறந்தவளாக எடுத்துக்காட்டும்...ஆனால் பலர் இதனை ஆணதிக்கம்,பெண்ணடிமைத்தனம் என்று பொய் வாதம் செய்கிறார்கள்.இப்படி வாதம் செய்யும் பெண்கள் ஏன் திருமணம் செய்கிறார்கள் என்று புரியவில்லை.......

ஒரு குடும்பத்தலைவிக்கு இல்லறக்கடமைகள்,குழந்தை வளர்ப்பு,அவர்களுக்குரிய பயிற்சியளிப்பு,குடும்ப பராமறிப்பு,வீட்டு நிர்வாகம் என பல வேலைகள் உள்ளன.ஆனால் பல பெண்கள் இந்தக்கடமைகளை மறந்து அலுவலகங்களில் தங்கள் காலத்தைக் கடத்துகிறார்கள்.இவர்கள் குடும்ப வாழ்வில் கிடைக்குப் பல இன்பங்களை இழந்து விடுவதை உணர்வதில்லை.

ஒரு மனைவியின் முதல் கடமை கணவனை மகிழ்விப்பது தான்.வேலைக்குப் போகும் பல பெண்கள் கணவனை மகிழ்விப்பது தம்பத்திய உறவில் மட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் வீட்டிலிருக்கும் பெண்கள் காலையில் அன்பாக கணவனை எழுப்பி அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து''அன்பாக''உணவு பரிமாறி அவர் விடைபெற்று செல்லும் போது நெற்றியில் அன்பாய் தரும் முத்ததிற்கு ஈடு செய்ய இந்த உலகில் எதுவுமில்லை.....

ஆனால் நம் புரட்சிப் பெண்கள் காலையில் அவசரமாக எழுந்து அரைகுறையாக வேலைகளை செய்வார்கள்.பாவம் இவர்களின் கணவர்கள் அவர்களை எழுப்புவது கடிகார ஓசை தான்........தங்களது வேளைகளை தாங்களே செய்து கொண்டு ''அவசரமாக''கணவனுக்கு உணவை பரிமாறி விட்டு ஒரு கையசைத்தலுடன் இருவரும் தங்கள் அலுவலகத்திற்கு செல்வார்கள்.......இது என்ன வாழ்க்கை........

இப்படி வேலைக்கு செல்பவர்கள் குடும்பத்தில் பல பிரச்சினை ஏற்படுகிறது.இதனால் பலர் விவாகரத்து பண்ணிக்கொள்கிறார்கள்.வாழ்க்கைய
ே கேள்விக் குறியாகிப்பாகும் அபாயமுள்ள விபரிதம் எதற்கு........வேலைக்கு செல்லும் பெண்களே ஒரு நாள் எல்லாவற்றையும் மறந்து குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு வேலைக்கு செல்வதை நீங்களே வெறுப்பீர்கள்..

இன்னும் எழுத நிறைய விடயங்கள் உள்ளது.ஆனால் நேரமில்லை. எனவே குடும்பம் சிறப்படைய காரணம் இல்லத்தரசிகளே எனக்கூறி வாதத்தை முடிக்கிறேன்.....

Salaam

திருமதி சப்ரா ரஃபி இனிமையான இல்லறத்திற்கு இல்லத்தரசிகள் தான் என்று கருத்துக்கள் கூறி இருக்கின்றார்.இரண்டு தரப்பினரும் மாறி மாறி வந்து கருத்துக்களை பதிவு செய்து பட்டி மன்றத்தை தூள்கிளப்புங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நடுவருக்கு முதல் வணக்கம். நான் இல்லத்தரசிகள் என்று வாதாட விரும்புகிறேன். இப்போது நேரம் குறைவு.... மீண்டும் வருகிறேன். (எதிர் கட்சியினரும் வந்தால் தானே டுஷூம் டுஷூம்'க்கு வசதியா இருக்கும்.)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

.குடும்பம் என்று சொல்லும் போதே அதில் கணவன் மனைவி இருவருக்கும் சம அளவு கடமையும்,பொறுப்பும் இருக்கிறது. வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தால் கணவரையும்,பிள்ளைகளையும் கவனித்து கொள்ள முடியும். அவர்களின் பசியறிந்து,ருசியறிந்து சமைத்து போடலாம். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் உடனிருந்து கண்ணும்,கருத்துமாக கவனித்து கொள்ளலாம். அதிலும் பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்களின் ஒவ்வொரு கால கட்டத்திலும், தாய் உடனிருப்பது அவசியம்.

வனிதா,ஜரீனா,சுஹைனா அலசுங்கள் உங்கள் கருத்துக்களை.நிறைய ஸ்னேகிதிகள் ஒரே அணியில் நின்று பட்டி மன்றத்தை குளிர விட்டு விடாதீர்கள்.சூடு பறக்கட்டும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சொன்னால் நம்ப மாட்டீர்கள் ,இன்று காலையில்தான் அலுவலகம் வரும்போது வேலைக்கு போவது சிறந்ததா? வீட்டிலிருப்பது சிறந்ததான்னு ஒரு தலைப்புல விவாதிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்... அது படியே சுகன்யா ஒரு தலைப்பு தந்திருக்காங்க :-) நன்றி சுகன்யா... ரொம்ப ரொம்ப நல்ல தலைப்பு..

இப்படி விவாதிக்கறப்ப என்னை மாதிரி ஆளுங்க மனக்குமுறல்களையும் சொல்ல முடியும்...ஒருவேளை மற்ற தோழிகளின் எதிர்வாதங்களால் என் மனதை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது ...

ரஃபி அவர்கள் எழுதியிருக்கற மாதிரி வேலைக்கு போற "பெரும்பான்மையான" (விதிவிலக்குகள் உண்டு) பெண்கள் ஆசைப்பட்டு செல்வதில்லை பெருமைக்காகவும் அல்ல... தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக வேறு வழியில்லாமல்தான் செல்கிறார்கள் நான் உட்பட..அப்படி கஷ்டப்பட்டு ஏன் வேலைக்கு போகணும்னு கேக்கலாம்...குறைந்த அளவு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காகவாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில வேலைக்கு செல்வது அத்தியாவசியம் ஆகிறது ..

\\வீட்டிலிருக்கும் பெண்கள் காலையில் அன்பாக கணவனை எழுப்பி அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து''அன்பாக''உணவு பரிமாறி அவர் விடைபெற்று செல்லும் போது நெற்றியில் அன்பாய் தரும் முத்ததிற்கு ஈடு செய்ய இந்த உலகில் எதுவுமில்லை.....\\

உண்மை ரஃபி....கணவருக்குனு மட்டும் இல்ல...குடும்பத்துக்கே.....என் அம்மாவை பார்க்கும் போதெல்லாம் நான் நினைத்ததுண்டு...நானும் இப்படி இருக்க வேண்டும் என்று... 5 மணிக்கு எழுந்துடுவாங்க.. காலையிலேயெ குளிச்சு வாசல்ல சாணம் தெளிச்சு கோலம் போட்டு (அம்மா ரொம்ப அழகா கோலம் போடுவாங்க) காலையில ஒவ்வொருத்தரயா எழுப்பி அவங்கவங்களுக்கு தேவையானத செஞ்சு ஸ்கூல் , காலேஜ் அனுப்பற வரை பம்பரமா சுத்துவாங்க... தினமும் செய்யற வேலைதான் சலிக்காம செய்வாங்க ... எங்க வீட்ட சுத்தி தோட்டம் போட்டிருப்பாங்க....அதுல அப்பப்ப வேலை செஞ்சுகிட்டு , எங்களையும் கவனிச்சுக்கிட்டு, வீட்டையும் அழகா வச்சுகிட்டு... இதுக்கு ஈடு இணை எதுவும் இல்லைங்க...இதுல பெண்ணடிமைத்தனம் எதுவும் இருக்கற மாதிரி எனக்கு தெரியல...
கண்டிப்பா பெண்கள் வீட்டுல இருந்து வீட்டையும் குடும்பத்தையும் கவனிச்சுகிட்டாதான் வீடு சொர்க்கமா இருக்கும்... இது என்னோட கருத்துதான்.. வேலைக்கு போற பெண்களை நான் குறை சொல்லலை :-)

ஆனா என் கல்யாணத்துக்கப்புறம் எல்லாம் கானல் நீரா ஆயிடுச்சு.... முதல்ல கோலம் போடுறது ..நாங்க இருக்கறது 2 வது மாடி..சாக்பீஸ் ல வேணா ரங்கோலி போடலாம்... இங்க எங்கத்த சாணம் தெளிச்சு கோலம் போடுறது...

\\ஆனால் நம் புரட்சிப் பெண்கள் காலையில் அவசரமாக எழுந்து அரைகுறையாக வேலைகளை செய்வார்கள்.பாவம் இவர்களின் கணவர்கள் அவர்களை எழுப்புவது கடிகார ஓசை தான்........தங்களது வேளைகளை தாங்களே செய்து கொண்டு ''அவசரமாக''கணவனுக்கு உணவை பரிமாறி விட்டு ஒரு கையசைத்தலுடன் இருவரும் தங்கள் அலுவலகத்திற்கு செல்வார்கள்.......இது என்ன வாழ்க்கை........\\

புரட்சில்லாம் எதுவும் இல்லைங்க..கொடுமைதாங்க... எல்லா வேலையையும் அரைகுறையா தான் செய்ய முடியும்...அறுசுவையை பார்து ஏதாவது குறிப்பு எடுத்து வைப்போம் செய்யலாம்னு...ஆனா அன்னைக்குன்னு பார்த்து லேட்டா எந்திரிப்போம் இல்லைன்னா அலுவலகம் சீக்கிரம் கிளம்பறா மாதிரி ஆயிடும்.. அப்புறமென்ன அந்த மெனுவ சனி,ஞாயிறுக்கு தள்ளி வைக்க வேண்டியத்துதான் :-) நல்லா ஆற அமர சமைக்கணும்னுனா கூட வீக் எண்ட் தான் :-(

குமுறல்கள் தொடரும்...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

பொதுவாக பார்த்தால் இல்லத்தரசியாய் இருப்பதில் சந்தோஷமும் இருக்கிறது,சங்கடமும் இருக்கிறது,அதே நிலைமை தான் வேலைக்குச் செல்லும் இடத்திலும்.என்றாலும் வேலைக்குச் செல்லும்போதுதான் தான் சந்தோஷம் அதிகம்.ஏனெனில் நான் இப்போ இல்லத்தரசி, ஹோம்மேக்கர்,ஹோம் என்சினியர் எப்படி வேண்டுமானலும் அழைத்துக்கொள்ளலாம்.முன்பு வேலைக்குச் சென்றேன்.இரண்டு பக்கமும் எப்படி இருக்கும் என்று தெரியும்.இப்ப வீட்டில் இருந்து தூங்கி விழிப்பதும்,சாப்பிடுவதும்,திரும்ப தூங்குவதும் இது தான் நடக்கிறது.முன்பு அழகா திட்டமிட்டு காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு நீட்டா உடை உடுத்தி வெளியே சென்று வேலை செய்து எவ்வளவு மகிழ்ச்சி.இப்ப ஒரு நைட்டியோடு எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் வாழ்வே சூன்யமாகத்தெரிகிறது.என்னதான் கொண்ட கணவர் ,பெற்ற பிள்ளைகளை கவனித்தாலும் இப்ப அப்ப இருந்த மதிப்பு இல்லை.செர்வண்ட் மாதிரி எல்லா வேலையும் நானே செய்றேன்.அப்ப எல்லாரும் சேர்ந்து செய்து கஷ்ட நஷ்டத்தை பகிர்ந்து வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்தது.முதலில் இல்லத்தரசிக்கு தான் வாதாடலாம் என்று நினைத்தேன்,உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்ல மனம் வரவில்லை.எனவே வீடும் நாடும் சிறக்கனும் என்றால் பெண்கள் வேலைக்குச் செல்வதே நல்லது என்று வாதிட வந்துள்ளேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வேலைக்கு சென்று வரும் சங்கீதா சிவகுமார்கூட இல்லதரசிதான் என் வாதிடுவது ஆசர்யமாக உள்ளது.சங்கீதா,வேலைக்கு செல்வதால்
உள்ள நன்மைகளையும் சொல்லுங்கள்.இரண்டு அணியினரும் காரசாரமாக வாதிட்டால்தான் சுவாரஸ்யமாக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஆஸியா,உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்