ஆப்ப மாவில் தண்ணீர் கூடிவிட்டது. என்ன செய்வது

இன்று இரவு ஆப்பம் செய்வதற்காக (அரிசி மா) காலை ஆப்பத்துக்கு அரைத்தேன். தண்ணீர் கூடிவிட்டது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மைதா கொஞ்சம் சேர்க்கலாமா? அருசுவை தோழிகளே help me please

அன்பு லலிதா,
மைதா வேண்டாம். வழுக் வழுகென்று இருக்கும். கோதுமை மாவு ஒரு கைப்பிடி சேர்த்து நன்கு கரைத்து வையுங்கள். சரியாகி விடும். ஆப்பமும் மெத்தென வரும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள லலிதா!

மாவை அப்படியே வைத்திருந்தீர்களானால் தண்ணீர் மேலாகத் தெளிந்து நிற்கும். தேவையில்லாத தண்ணீரை அப்படியே வடித்து விடலாம். அப்படி செய்ய முடியவில்லையென்றால் அரைத்து கொஞ்சநேரம்தான் ஆகியிருந்தால் அரை கப் சாதம், அரை கப் தேங்காய் இரண்டையும் அரைத்துச் சேர்த்துக் கலக்கி புளிக்க விடவும். அல்லது அரை கப் பச்சரியுடன் 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்துச் சேர்த்து புளிக்க விடவும்.

Thanks Selvi akka. கோதுமை மாவை ஆப்பம் சுடும் போது போட வேண்டுமா அல்லது நான் lunch க்கு வீட்டுக்கு போகும் போது போட்டுவிட்டு வரவா?

Lalitha

காலை 6 மணிக்கு அரைத்துவிட்டேன். அரைத்து வைத்துவிட்டு office வந்துட்டேன். ஒரே ஆப்ப யோசனையாகவே இருக்கிறது

Lalitha

டைம் இருந்தால் லஞ்சுக்கு போகும் போதே கரைத்து வைத்தால் நல்லா இருக்கும். அப்படி முடியலைன்னா, மாலை போனதும் கரைத்து வைத்து இரவு ஊற்றலாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு மனோ அக்கா, வீட்டுக்கு போய் பார்க்கிறேன். தண்ணீரை வடிக்க முடிந்தால் வடித்து விடுகிறேன். Thanks

Lalitha

மனோ அக்கா சொன்னது போல தண்ணீரை வடித்துவிட்டு கோதுமை மா சேர்க்கலாமா?

Lalitha

தாராளமாக தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கலாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Thanks a lot for both of you, பெரிய தலைவலி தீர்ந்த மாதிரி இருக்கு

Lalitha

லலிதா, வீட்டில் பிரெட் இருந்தால் அதன் ஓரங்களை நீக்கிவிட்டு மாவுடன் சேர்த்து அரைத்தும் ஆப்பம் சுடலாம்.பிரெட் அதிகப்படியான நீரை உறிஞ்சி விடும் மாவும் புளிக்கத்தேவையில்லை, நாங்கள் கொடுத்திருக்கும் டிப்ஸில் உங்களால் எது முடியுமோ அவற்றையே செய்து பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்