கணவரின் பங்கு

மனைவி கர்பமாக இருக்கும் காலத்தில் கணவரின் பங்குயென்ன யென்பதை அரிய ஆவல்.

மனைவி கர்பமானவுடன் பலபல உடல்ரீதியான மாற்றங்கள் நிகழும் அதிகப்படியான மூட் ஸ்விங்ஸ் இருக்கும்..தேவையில்லாமல் கோபம் கொள்வது வாழ்க்கையே வெறுத்து போனது போல் தோன்றுவது தன்னை யாரும் கவனிப்பதில்லையென்ற உணர்வு அதிகமாக இருக்கும் ..அதனை புரிந்து கொண்டு ஏட்டிக்கு போட்டு நின்று அவளிடம் சண்டை போடாமல் இருப்பது அப்பா வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு செய்யும் பெரிய விஷயம்

என்ன தான் ஈகோ முன்னே வந்தாலும் இது உனக்கு சும்மா தோன்றுவது தான் எல்லாம் குழந்தை பிறந்தபின் சரியாகிவிடும் என்று தலையை வருடிக் கொடுங்கள்..கோபம் பறந்து விடும்.
2)இடையிடையே சந்தோஷபடுத்த பழ ஜூஸ்,சேலட் என செய்து கொடுத்து சந்தோஷப் படுத்தலாம்..அவள் சாப்பிட பிடிக்காமல் இருந்தால் கூட நீங்கள் கொடுப்பது ஆனந்தம் கொள்ள செய்யும்...தாய் மகிழ்ச்சியாக இருப்பது குழந்தைக்கு நல்லது
3)னெட்டில் பார்த்தால் இன்ன வாரத்தில் குழந்தை இன்ன அளவில் இருக்கும் என்னென்ன மாற்றங்கள் தெரியும் என்பதை படித்து கொண்டு மனைவியிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்..மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
4)பேரென்டல் க்லாசெஸ் நடக்கும் சில இடங்களின் அங்கு மனைவியையும் கூட்டி சென்று பங்கு பெருங்கள்
5)பிறக்கப் போகும் குழந்தையை கவனிக்க உங்கள் மனநிலையை தயார்படுத்தி அதனை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
6)கர்பகாலத்தில் சிலருக்க்கு எதிலும் நாட்டம் இருக்காது கொஞ்சம் தொந்தரவு செய்யாமல் இருங்கள்
7)பிறக்க போகும் குழந்தைக்கான உடுப்பு,டயபர்,பிப்ஸ்,சாக்ஸ்,தொட்டில் எல்லாம் வாங்கி வைக்கலாம்..அதனை தினம் தினம் எடுத்து பார்க்க கிடைக்கும் ஆனந்தமே தனி
8)வயிற்றிலிருக்கும் பிள்ளையுடன் பேசுங்கள் குழந்தை அதனை கேட்கும் பிறந்ததும் அப்பாவின் சத்தத்தை புரிந்து கொள்ளும்
9)குழந்தை பிறந்தபின் உண்டாக கூடிய மாற்றங்கள் கவனிப்பு பற்றி தெரிந்து வைத்து அதனைப் பற்றி மனைவியுடன் டிச்கஸ் பன்னுங்க.அது பின்னாளில் உதவும்

www.babycenter.com என்ற வெப்சைட்டில் login செய்து குழந்தை தங்கிய நாட்கணக்கை கொடுத்தால். அவர்கள் வாராவாரம் உங்கள் இ மெயிலுக்கு குழந்தையின் வாராவார உடலுறுப்பு வளர்ச்சிகளையும் தாயினுடைய உடல் மாற்றத்தைப் பற்றியும் அனுப்பிவைப்பார்கள். அதுமட்டுமல்ல தாயின் உணவுமுறைகள் உடல்பயிற்சிகள் போன்ற பல விடயங்களை இந்த தளத்தில் பார்வையிடலாம்.
இந்த தளம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கும் இதில் நிறையப் பதில்கள் கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்