எளிதில் செய்யக் கூடிய பாப்-அப் வாழ்த்து மடல்

தேதி: November 20, 2008

3
Average: 3 (2 votes)

கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான செல்வி. விசா தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும். சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.

 

மெல்லிய அட்டை
கலர் காகிதங்கள் (சிவப்பு, பச்சை, வெள்ளை, மஞ்சள்...)
கிளிட்டர் பசை/ பவுடர் (விரும்பினால்)
பசை
டிசைன் போட்ட காகிதங்கள் ( இரண்டு வித்தியாசமானவை)

 

டிசைன் செய்யப்பட்ட இரு காகிதங்களில் ஒன்றை வாழ்த்து மடலின் உட்புறத்துக்கும் மற்றொன்றை வெளிப்புறத்துக்கும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
டிசைன் செய்த காகிதங்களையும், மெல்லிய அட்டையயும் ஒரே அளவில், வாழ்த்து மடலுக்கேற்றாற் போல் வெட்டிக் கொள்ளவும்.
வெட்டி வைத்திருக்கும் மெல்லிய அட்டையை எடுத்து அதன் உள்ளே பசை தடவி, உள் புறத்துக்கென்று வெட்டி வைத்திருக்கும் காகிதத்தை ஒட்டவும்.
வாழ்த்து மடலின் மடிப்பில் 3 செ.மீ அளவில் படத்தில் காட்டியவாறு சில செ.மீ அளவு இடம் விட்டு வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய பகுதியை மெதுவாக உள்புறமாக தள்ளிக் கொள்ளவும். வாழ்த்து மடலை திறக்கும் போது, படத்தில் காட்டியுள்ளது போல் இருக்க வேண்டும்.
வெளிப்புறத்துக்கு வைத்திருக்கும் டிசைன் காகிதத்தை இரண்டாக மடித்து மத்தியில் பசை தடவி வாழ்த்து மடலில் ஒட்டிக் கொள்ளவும். வெளிப்புறத்துக்கு நான் ட்ரான்ஸ்பரண்ட் பேப்பர் உபயோகித்திருப்பதால் அதனுள்ளே ஒரு வெள்ளைத்தாளும் சேர்த்துக் கொள்ளவும். சாதாரண டிசைன் காகிதமாயிருப்பின் அப்படி செய்யவேண்டிய அவசியமில்லை.
கலர் காகிதங்களில் பூக்கள், இலை வடிவங்கள் வித்தியாசமான அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய அட்டையில் சாடி போன்று வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டிய வெவ்வேறான வடிவங்களைக் கொண்டு பூச்சாடி போன்று ஒட்டிக் கொள்ளவும். இந்தப் பூச்சாடியின் உயரம் வாழ்த்து மடலின் உயரத்தை (மூடியிருக்கும் போது) விட குறைவாக இருக்குமாறு கவனித்துக் கொள்ளவும்.
விரும்பினால் வாழ்த்து மடலின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் உள்ள டிசைன்களில் க்ளிட்டர் பவுடர்கள்/ பசை தடவிக் கொள்ளவும்.
தயாராக செய்து வைத்திருக்கும் பூச்சாடியை வாழ்த்து மடலின் உள்புறத்தில் (உள்புற மடிப்பில்) ஒட்டிக் கொள்ளவும்.
இந்தப் பூச்சாடிக்குப்பதில் அவரவர் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் வித்தியாசமான வடிவங்களும் செய்து கொள்ளலாம்.
எளிதில் செய்யக்கூடிய பாப்-அப் வாழ்த்து மடல் ரெடி. இனி வாழ்த்து மடல் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. அவரவர் தம் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் பலவிதமான நிறத்திலும், வடிவத்திலும் செய்து அசத்தலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

விசா வாழ்த்துமடல் அழகாக இருக்கிரது.நாங்களும் செய்ய முயல்கிரோம்.மேலும் பல கைவினைப்பொருட்கலை செய்து அளியுங்கள்.

romba nallayirukku..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

ஹலோ தனு, நன்றிகள் :-) செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொள்ளலாம்... பேர்த்டே காட் என்றால், உள்ளே ஒரு கேக் வடிவம் செய்து ஒட்டலாம்...திருமண வாழ்த்து என்றால், அந்த திருமண தம்பதிகளின் போட்டோ ஒட்டலாம்...இப்படி செய்து கொடுக்கும் போது ஒரு பெர்ஸனல் டச் இருக்கும்...
விசா

ஹலோ அம்பிகா, நன்றிகள் :-)
விசா

ஹாய் விசா.
உங்கள் வாழ்த்து அட்டை மிக அழகாக இருக்கிறது.தொடரட்டும் உங்கள் பணி.
அன்புடன்,
செபா.

அன்பின் விசா, மிகவும் அழகான வாழ்த்து அட்டை. எனக்கும் இவற்றில் நல்ல விருப்பம். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய அனுப்புங்கோ. வரைதல் விருப்பம் எண்டால் என்ன மாதிரி வரைகின்றனீங்க? இயற்கை காட்சி, ஆட்கள், பூக்கள் etc.
-நர்மதா :)

ஹலோ செபா, நன்றிகள் :-)
விசா

ஹலோ நர்மதா அக்கா, நன்றி :-)
வரைதல் பெரிசா எக்ஸ்பேர்ட் எண்டெல்லாம் இல்லை. சும்மா ஸ்கூலில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கம்தான். இது அது எண்டு இல்ல எல்லாம் வரைவதுதான். கூடுதலா ஆட்கள் அல்லது சுவாமி படங்கள், பூக்கள் தான் வரைவதுண்டு. இப்ப பெரிசா டைமும் கிடைக்கிறதில்லை. அறுசுவை பார்க்கத்தொடங்கியதும், இப்ப வீக்கெண்ட்ஸில இதுதான் செய்யிறது. (உங்கட சோப்பில் பூச்சாடி சூப்பர்...நானும் ஸ்கூல் நாட்களில் செய்திருக்கிறேன்:-)

விசா

விசா, வாழ்த்து மடல் மிகவும் அழகாக இருக்கிறது. வாணி

வாழ்த்துமடல் மிக அழகாக இருக்கிறது விசா. பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ வாணி மற்றும் இமா மேடம், நன்றிகள் :-)

விசா

சதாலட்சுமி
உங்கள் வாழ்த்து மடல் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

சதாலட்சுமி

ஹலோ சதாலட்சுமி மேடம்,
நன்றிகள் :-)

விசா

ஹாய் விசா,
இங்கு நீங்கள் பயன்படுத்தியுள்ள ட்ரான்ஸ்பேரண்ட் பேப்பர் என்ன மாதிரியான கடதாசி என்று குறிப்பிட இயலுமா? பார்க்க ப்ரின்டட் பார்ச்மன்ட் பேப்பர் மாதிரி இருக்கிறது. அதுதானா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

lovely
என்னப்பா இது பின்னுட்டங்களில் வருது ஆனா மெயினில் வரமாட்டேங்குது ஆசியா கொஞ்சம் என்னானுபாருங்கோ
துபை அபுதாபு தோழிகளின் பேஜ்

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

lovely
விசா அருமையாக இருக்குபா
மேலும் பலதிரமைகள் கொடுங்கோ

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

நலமா?இப்பதான் இந்த வாழ்த்துமடல் பார்த்தேன்,சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

lovely
துபை அபுதாபி அஜ்மன் தோழிகள் யாரேனும் உண்டா
இதில் 80 வரைஇருக்கும் கருத்துக்கள்தான் வருது மேலும் உள்ளது எங்கே
என்ன ஆசியா கன்டும் கானாத்துபோல் போரீங்க மீண்டும் சாரி விசா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

அங்கே துபை லின்க்கில் பதில் அளித்து இருக்கிறேன்,பாருங்க.நீங்க பார்த்து இருப்பீங்கன்னு நினைச்சேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

lovely
அதில்தான் தெரியமாட்டேங்குரதே
நீங்ககொடுத்த சந்திப்பதை பற்றித்தானே என்ற
கருத்தோடு தெரிகிரது அதர்குமேல் உள்ளது தெரியவில்லை
அதாந்தவிக்கிரேன்

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

என் கேள்விக்குப்பின் இத்தனை பின்னூட்டங்களா என்று யோசித்தேன். சரி, இதுதான் விஷயமா? விசா, நான் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.;-) நன்றி
இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ மலிக்கா, ஆசியா உமர் மேடம், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி :-)

ஹலோ இமா மேடம், நன்றிகள் :-) இவ்வளவு தாமதமாய் பதிலளிப்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நாட்களாய் அறுசுவையில் வர முடியாமல் போய்விட்டது. நான் உபயோகித்திருப்பது printed parchment பேப்பரா என்று எனக்குத்தெரியவில்லை, இந்த பேப்பர் scrap book material பாக்கேஜில் வந்தது.

அன்புடன் விசா

ஹாய் விசா, பதிலுக்கு நன்றி. பாச்மன்ட் கடதாசி மங்கலாக (பேக்கிங் கடதாசி போல) இருக்கும். O.H.P பேப்பர் போலிராது. உங்கள் காட் செய்ய நினைத்தேன். க்ராஃப்ட் பாக்கில் வந்ததென்றால் அதுவாகத்தான் இருக்கும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

parpadharku elidhaka irukiradhu. seidhu parkirean

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta