குழந்தைக்கு சளி உதவுங்கள்.....

எனது குழந்தைக்கு 7 மாதம் சளி, மூக்கடைப்பால் மிகவும் அவதிப்படுகிறான். பால் குடிக்க, சாப்பிட எதுவுமே முடியவில்லை. சளி வராமல் என்னமாதிரி சாப்பாடு கொடுக்கலாம், இந்த சளித்தொல்லையை எப்படிக் குறைக்கலாம். சொல்லுங்கள் தோழிகளே. இங்கே வின்டர் ஆரம்பித்துவிட்டது எனக்கும் சளி உள்ளது இதுதான் காரணமா? நான் அடுத்த மாதம் ஊருக்கப் போகவுள்ளேன் எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் தோழிகளே.....

அன்புடன் ரிகா.

குடிப்பதற்கு வெந்நீர் இளம் சூட்டில் அடிக்கடி கொடுக்கலாம். ஆரஞ்சு சூஸ் கொடுக்கலாம். குடிப்பதற்கு ஏதாவது அடிக்கடி குடுப்பது நல்லது. Nasal drops ஒரு நாளைக்கு இருமுறை உபயோகிக்கலாம்.
குழந்தை வாந்தி எடுத்தால் கவலை பட வேண்டாம். சளி வெளியே வந்து விடும்.
My doctor suggested this for my kids.

அன்பு ரிகா,
ரொம்ப மமச்சு விட முடியலைன்னா, தேங்காய் எண்ணெயில் ஒரு துளி மஞ்சள் தூள் போட்டு (கற்பூரம் கிடைக்காதுன்னு தெரியும்) சூடு பண்ணுங்கள். நல்லா காய்ந்ததும் ஆற வையுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும் போது, குழந்தையை காலில் மல்லாக்க படுக்க வைத்து, மூக்கை சுற்றியுள்ள பகுதிகளில் நல்லா தடவுங்கள். நெஞ்சு, முதுகிலும் தடவுங்கள். மூக்கினுள் லேசாக எண்ணெய் போகணும். 5 நிமிடம் கழித்து, குப்புற படுக்க வைத்து, முதுகை தட்டிக் கொடுங்கள். மூக்கு வழியாக சளி வரும். ஒரு நாளைக்கு 4 வேளை விடலாம். கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். கற்பூரம் கிடைத்தால் இன்னும் நல்லது. முருங்கைப்பூ மொட்டும் போட்டு வெடிக்க விட்டு, விடலாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி lina. அப்படி செய்துபார்க்கிறேன்.ஆனால் எனது மகன் தண்ணீர் குடிக்க ரொம்ப களவு குடிக்கவேமாட்டார். நோயைக் குணப்படுத்த நிச்சயமாக இதை டிரைப்பண்னுகிறேன்.

அன்பின் ரிகா.

அன்பின் செல்வி அம்மா எப்படி இருக்கிறீங்க? இப்போ பூரண குணமடைஞ்சிட்டீங்களா? எப்படி எனக்குத் தெரியுமென்று யோசிக்கிறீங்களா? நான் அறுசுவையை 1 வருடத்துக்கு மேலாகப் பார்வையிடுவதோடு, அப்பப்போ கேள்விகளும் கேட்டுக்கொள்வேன். பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. என்னிடம் ஒலிவ் ஒயிலும், கொல்ஸ்ட்ரோல் பிரீ ஒயிலும்தான் இருக்குது இதில் எந்த ஒயிலில் செய்து பார்க்கலாம்?

அன்புடன் ரிகா.

ரிகா இதை சாதாரணமாக தேங்காய் எண்ணெய் அது இல்லைன்னா நல்லெண்ணெயில்தான் செய்வார்கள்.உங்களுக்கு அங்கு தேங்காய் கிடைக்குமா?கிடைத்தால் தேங்காய் பால் எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சினால் எண்ணெய் தனியே பிரிந்து வரும்.அதை வடிகட்டி யூஸ் பண்ணலாம்.கொஞ்சம் சிரமம்தான் ஆனால் குழந்தைக்காக மட்டும் 2கப் தேங்காய் பாலில் செய்யுங்கள்.தேங்காய் பால் எடுக்கும் போது மிக குறைவான தண்ணீர் மட்டுமே சேர்த்து கெட்டியான பால் எடுத்து செய்யுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்புள்ள ரிகா சளிக்கு சாப்ரான் பால் கொடுங்கள் அது காது கிட்ட மூக்கில் அடித்து கொண்டுள்ள சளியை கரக்கும் , இஞ்சி சாற்றில் தேன் கலந்தும் கொடுக்க்லாம்.ஒரு டம்ளரில் வெண்ணிர் வைத்து ஆவி பிடிக்க வைய்யுங்கள் கைய கால அதில் பொடமா ஜாக்கிரதையா (அதி ஒரு பின்ச் சர்க்கரை (அ) ஒரு சொட்டு ஏதாவது தைலம் /
நம்ம கை விரலை சூடுனா டம்ளரை பிடித்து அந்த விரல் சூடை மூக்கில் வைத்து தடவுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

அன்பு ரிகா,
கவி சொன்னது சரியே. தேங்காய் எண்ணெய் பெஸ்ட். நல்லெண்ணெயும் ஓகே. கவி சொன்னது போல் தேங்காய்ப் பாலில் கொஞ்சமாக காய்ச்சிக் கொள்ளவும். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
அனக்கு இப்ப பரவாயில்லைப்பா. ரொம்ப நன்றி என்னை விசாரித்ததற்கு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

முதலில் தலையில் நல்லெண்னை தேய்த்து பின்னர் சீயக்காய் போடவேண்டும் பின்
வெத்தலை அடுப்பில் மீதமான சூட்டில் காட்டி எடுக்க வேண்டும் பின்
அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் பின் சாறில் சிறு துண்டு சூடும் போட்டு சூடக்கவேண்டும் பின் குழந்தைக்கு கொடுங்க சளி மலம் செல்லும் வழியில் வந்துவிடும்

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. இங்கு தேங்காய் கிடைப்பதில்லை. நான் கொகனட் பவுடர்தான் பாவிக்கிறேன் இது பரவாயிலையா?

அன்புடன் ரிகா.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. 7 மாதக் குழந்தைக்கு இஞ்சி சாறு கொடுத்தால் பரவாயில்லையா? கொடுப்பதாயின் எவ்வளவு அளவு கொடுக்கலாம்? அத்தோடு 7 மாதம் முதல் எவ்வாறான சாப்பாடு கொடுக்கலாம்? நேற்று ஆவி பிடித்தேன்.

அன்புடன் ரிகா.

மேலும் சில பதிவுகள்