குரோசே(Crochet) கற்றுக் கொள்ளலாம்

தேதி: November 22, 2008

4
Average: 3.4 (7 votes)

குரோசே என்பது நூலைக் கொண்டு பின்னப்படும் பின்னல் வகைகளில் ஒன்று. இதனைக் கொண்டு ஆடைகள், ஸ்வெட்டர்கள், சால்வைகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவை செய்யலாம். இது மிகவும் உபயோகமானதும் அழகானதுமான பொழுதுபோக்கு ஆகும். இதனை செய்வது ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும் பயிற்சி செய்ய பழகிவிடும். இதனைச் செய்யச் செய்ய இன்னும் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும். இந்த குரோசே பின்னல் முறைகளை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

பின்னல் நூல்(தேவையான நிறங்களில்)
குரோசே ஊசிகள்(தேவையான அளவுகளில்)

 

இதற்கு உபயோகப்படுத்தும் நூல்களிலும்(yarns) பலவிதமான அளவுகள் உள்ளன. இவையும் செய்யும் பொருளின் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்படும். (Sports weight yarn, worsted weight yarn, baby fingering weight yarn etc.)
இதற்கு முனை வளைந்த ஒற்றை ஊசி(hook) பயன்படுத்தப்படும். இந்த ஊசிகள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. செய்யும் பொருளின் தன்மைக்கேற்ப வெவ்வேறு தடிமனான ஊசிகள் பயன்படுத்தப்படும். யு.எஸ்ஸில் ஆங்கில எழுத்தின் அடிப்படையிலும் யு.கே மற்றும் ஏனைய நாடுகளில் எண்களின் அடிப்படையிலும் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஊசிகளில் அனைத்து விபரங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். (H/8 5.00 mm, ஏ/4 3.50 mm)
குரோசேவின் அடிப்படை பின்னல்கள்: சங்கிலி (Chain- 'ch' ) - இந்த பின்னலின் அடிப்படையே சங்கிலிதான். சங்கிலியை அடித்தளமாக வைத்தே அதன் மேல் ஏனைய அலங்கார பின்னல்கள் போடப்படும். இதற்கு, நூலின் ஒரு முனையில் லூப் போன்ற முடிச்சு ஒன்றைப் போட்டு ஊசியில் மாட்டிக் கொள்ளவும். பின்னர் நூலின் மறு பக்கத்தை தேவையான அளவு விட்டுவிட்டு மீதமிருப்பதை இடது கையில் சுருட்டி பிடித்துக் கொள்ளவும். ஊசியின் வளைந்த முனையால் நூலை மாட்டி (படத்தில் காட்டியவாறு) ஊசியை மாட்டியிருக்கும் லூப்பினூடாக இழுக்கவும்.
இதைப் போல் தேவையான நீளத்திற்கேற்ப சங்கிலிகளைப் போட்டுக் கொள்ளவும்.
தனி குரோசே பின்னல் (Single crochet - 'sc' ): இதற்கு ஊசியிலிருந்து இரண்டாவது சங்கிலியில் ஊசியை நுழைத்து படத்தில் உள்ளவாறு நூலை மாட்டி இழுக்கவும். இப்போது ஊசியில் இரண்டு லூப்கள் இருக்கும். பின்னர் மீண்டும் ஊசியின் முனையில் நூலை மாட்டி இவ்விரு லூப்களிலும் நுழைத்து இழுத்து சிறிது இறுக்கவும்.
இவ்வாறு அனைத்து சங்கிலிகளிலும் போடவும். இதுதான் தனிப் பின்னல். இதன் உயரம் குறைவாக இருக்கும். ஆனால் மிகவும் நெருக்கமாக அழகாக இருக்கும். இதன் மேற்பக்கத்தில் சங்கிலிகள் இருப்பது போல் தெரியும். தொடர்ந்து பின்னுவதற்கு இந்த சங்கிலிகள் உதவும். (குறிப்பு: தொடர்ந்து அடுத்த வரிசையும் தனிப்பின்னலிலேயே போட வேண்டும் என்றால் ஒரு சங்கிலி போட்டு பின்னலைத் திருப்பி முதல் வரிசை போட்டது போலவே மீண்டும் செய்யவும்)
இரட்டை குரோசே பின்னல் (Double crochet - 'dc' ): இதற்கு நூலை ஒருமுறை ஊசியில் சுற்றிக் கொண்டு (Yarn over the hook) பின்னர் ஊசியிலிருந்து மூன்றாவது சங்கிலியில் ஊசியை நுழைத்து படத்தில் உள்ளவாறு நூலை மாட்டி இழுக்கவும். இப்போது ஊசியில் மூன்று லூப்கள் இருக்கும். பின்னர் மீண்டும் ஊசியின் முனையில் நூலைக் மாட்டி முதல் இரண்டு லூப்களிலும் நுழைத்து இழுக்கவும்.
இப்போது ஊசியில் மீண்டும் இரண்டு லூப்கள் இருக்கும். மீண்டும் ஊசியின் முனையில் நூலைக் மாட்டி இவ்விரு லூப்களிலும் நுழைத்து இழுத்து சிறிது இறுக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்யவும். இதுதான் இரட்டை குரோசே பின்னல். பொதுவாக பெரும்பாலான கைவினைப் பொருட்கள் இரட்டை குரோசே பின்னலில்தான் போடப்படும். (குறிப்பு: தொடர்ந்து அடுத்த வரிசையும் இரட்டை பின்னலிலேயே போட வேண்டும் என்றால் இரு சங்கிலி போட்டு பின்னலைத் திருப்பி முதல் வரிசை போட்டது போலவே மீண்டும் செய்யவும்)
முக் குரோசே பின்னல் (Triple crochet - 'trc' ): இதற்கு நூலை இருமுறை ஊசியில் சுற்றவும்.
பின்னர் ஊசியிலிருந்து நான்காவது சங்கிலியிலில் ஊசியை நுழைத்து படத்தில் உள்ளவாறு நூலை மாட்டி இழுக்கவும். இப்போது ஊசியில் நான்கு லூப்கள் இருக்கும். பின்னர் மீண்டும் ஊசியின் முனையில் நூலை மாட்டி முதல் இரண்டு லூப்களிலும் நுழைத்து இழுக்கவும்.
இப்போது ஊசியில் மூன்று லூப்கள் இருக்கும். மீண்டும் ஊசியின் முனையில் நூலைக் மாட்டி முதலிரு லூப்களிலும் நுழைத்து இழுக்கவும்.
இப்போது ஊசியில் மீண்டும் இரண்டு லூப்கள் இருக்கும். மீண்டும் ஊசியின் முனையில் நூலை மாட்டி இவ்விரு லூப்களிலும் நுழைத்து இழுத்து சிறிது இறுக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்யவும். இதுதான் முக் குரோசே பின்னல். இது தனி, இரட்டை பின்னல்களைப் போல நெருக்கமாக இருக்காது. ஆனால் சிறிது நீளமாக இருக்கும். (குறிப்பு: தொடர்ந்து அடுத்த வரிசையும் முக் குரோசே பின்னலிலேயே போட வேண்டும் என்றால் 3 சங்கிலி போட்டு பின்னலைத் திருப்பி முதல் வரிசை போட்டது போலவே மீண்டும் செய்யவும்)
படத்தில் ஊசி மற்றும் நூலின் தன்மைகளை வேறுபடுத்தி காட்டுவதற்கு இரண்டு வேறு வேறு தடிப்புள்ள நூல் மற்றும் ஊசிகளில் போடப்பட்ட ஒரே வகையான பின்னல்கள் காட்டப்பட்டுள்ளன.
தொடுப்பு பின்னல் முறை 1 (Slip stitch - 'sl st' ): இது வட்டமாக பின்னும் போது வட்டத்தினை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும். இதற்கு வட்டத்தில் தொடக்க பின்னலில் ஊசியை நுழைத்து நூலைக் மாட்டி இழுக்கவும்.
பின்னர் இவ்வாறு இழுத்த நூலை மீண்டும் ஊசியிலுள்ள லூப்பில் மாட்டி இழுத்து இறுக்கவும்
தொடுப்பு பின்னல் முறை 2 (Slip stitch - 'sl st' ): இது, வேறு நிற நூலை ஏற்கனவே பின்னிய பின்னலுடன் இணைப்பதற்கு பயன்படுத்தப்படும். இதற்கு எந்த பகுதியில் நூலை இணைக்க வேண்டுமோ அந்த சங்கிலியுடன் ஊசியை மாட்டி நூலை இழுக்கவும்
இப்போது ஊசியில் இரண்டாவது நூலின் லூப் ஒன்று போடப்பட்டு விடும். பின்னர் மீண்டும் ஊசியின் முனையில் நூலை மாட்டி இந்த லூப்பினுள் விட்டு இழுத்து இறுக்கவும். (பின்னர் எப்பொழுதும் போடுவது போல பின்னலைப் போடவும்.). இந்த பின்னல்களை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து பழகினால் பின்னல் மூலம் கைவினைப் பொருட்கள் செய்வது எளிமையாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

உப்படி இருக்கிங்க,உங்க குழந்தை எப்படி இருக்கா?உங்க குரோசா வேலைப்பாடு ரொம்ப நல்லா புரியும்படி இருக்கு,எனக்கும் சாதரணமாக குரோசாவில் கூடை பின்னத் தெரியும்.இரட்டை குரோசா பின்னல் வரைத் தெரியும்,மூன்றாம் பின்னல் உங்க செய்முறை படங்கள் பார்த்து தெரிந்துக் கொண்டேன்.எனக்கு இதில் எப்படி ஸ்வெட்டர் பின்னுவது என்று சொல்லுங்களேன்.என் மகளுக்கு தைத்துப் போட ஆசை.நீங்க சமையல்,கிராப்ட் ஒர்க் என அனைத்துலும் கலக்குறீங்க,வாழ்த்துக்கள்.

நர்மதா எனக்கும் இந்த பின்னலை கொண்டு பர்ஸ், ஹேர்பேண்ட், டெலிபோன் மேட் செய்யத்தெரியும். ஆனால் மேனகா சொல்லியது போல் ஸ்வெட்டர்,ஸ்கார்ப்,குழந்தைகளுக்கான சாக்ஸ் செய்வது தெரியாது. எங்களுக்காக அதை கற்றுக்கொடுங்கள்.இன்னும் நீங்க நிறைய செய்து கலக்குங்க. உங்க பேரை சொல்லி நாங்களும் கலக்குவோம்ல.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நர் குழ்ந்தையும் கற்றுகொள்ற மாதிரி.தெளிவா சொல்லி இருக்கிறீங்கள்.பொழுதுபோக்கு என்றால் டிவி ஐ கொட்டக்கொட்ட பாத்துக்கொண்டு இருப்பதை விடுத்து நிறைய உபயோகமான பொழுதுபோக்கெல்லாம் சொல்லித்தாறீங்கள்.உங்களுக்கு மிகவும் நல்ல மனம்.
சுரேஜினி

யாருப்பா அங்க... கட்சியெல்லாம் ஆரம்பிக்கறீங்க போல!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆமா இப்போதான் கட்சிக்கொடி பின்னிக்கொண்டிருக்கிறோம்.எங்கள் கட்சியில் பின்னிப்பிணைந்து பின்னலைக் கற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டு கொல்கிறேன்.
சுரேஜினி

சுரேஜினி

எனக்கு ரெண்டு குச்சி வைச்சு தான் இது போட தெரியும் அதுவும் புது கலர் ஆட் செய்ய தெரியாது.... நானும் நல்ல எக்க்ஷெல் யெல்லொ கலரில் ரெண்டு வாங்கி வச்சு இருக்கேன்.. இந்த ஒரு குச்சி மேட்டர் கொஞ்சம் கஷ்டம் போல இருக்கு. அப்புறம் ஒரு ஹோல் பண்டல் பெயிஜ் கலரும் இருக்கு

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்களுக்கு ஒரு புது தகவல் ( மே பீ பழசு)

While you do knitting , our brian releases/increases Serotonin production .. which is the root cause for all our good/bad moods. i was trying to quote the article i read in a magazine. everywhere they ask me to use a logon.

But I felt a difference when i did knitting. I am planning to continue after my vacation.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழ்த்திய தோழிகளுக்கு நன்றி. குழந்தை நலமாக இருக்கிறா.
மேனகா, உமா உங்களுக்கு பின்ன தெரியும் என்றால் நொட்டேஷன் பார்த்து செய்வீர்கள்தானே. இணையத்தில் ஏராளமான இலவச ப்ரொஜெட்கள் உள்ளன. பாருங்கள். இந்த அடிப்படை பின்னல்கள் தெரிந்தால் போதும். ஒவ்வொரு ப்ரொஜெக்டாக விளக்க படம் எடுப்பது வீண் அதுதான் நான் அவற்றை அனுப்பவில்லை. முடிந்தால் அனுப்புகிறேன்.

சுரேஜினி, இங்கு நிற்றிங், குரோஷே கிளப்கள் கூட இருக்கு. சிறு சிறு குழுவாக மாலில் வந்து பின்னிக் கொண்டு இருப்பார்கள்:) இதில் இரட்டை குச்சியில் (நன்றி இலா:)!) செய்யும் முறை வீடியோவாக உள்ளது. பாருங்கள்
http://www.knittinghelp.com/

இலா, உங்கட 'குச்சி மேட்டர்' படிக்க ஒரே சிரிப்பா இருக்கு.:)) இங்கு 'யாண் யோகா' (Yarn Yoga) என்று க்ராஃப்ட் கடைகளில் செய்வார்கள். எல்லாரும் போய் பின்னுவார்கள். இரட்டை குச்சியை விட ஒரு குச்சிதான் சுலபம். என்னைப் பொறுத்து அதுதான் அழகாக வருவதாக எண்ணம் :)

-நர்மதா:)

என் மகளுக்கு ரொம்ப useful,art and craft claas யில் இப்ப சொல்லி கொடுக்கிறாங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு நர்மதா,

எனக்கு பேசிக் எம்பிராய்டரி படிக்க வேண்டும் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு படத்தோடும் விளக்கதோடு சொல்லி கொடுங்கள் ப்ளீஸ்------------ சித்ரா

அன்பு நர்மதா,

எனக்கு பேசிக் எம்பிராய்டரி படிக்க வேண்டும் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு படத்தோடும் விளக்கதோடு சொல்லி கொடுங்கள் ப்ளீஸ்------------ சித்ரா

அன்பு நர்மதா,

எனக்கு பேசிக் எம்பிராய்டரி படிக்க வேண்டும் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு படத்தோடும் விளக்கதோடு சொல்லி கொடுங்கள் ப்ளீஸ்------------ சித்ரா

ஏன் மலில்கா அக்கா இது நியாயம என்ன அங்க வர் சொல்லிட்டு இப்படி இங்க வந்து இருக்கிங்க
சரி சரி அங்க எப்பொ வருவிங்க யாருனு தெரியுதா அதான் குட்டி கன்டு புடிங்க

குரோசே
அன்பின் நர்மதா!
உங்களின் கைத்திறமைகள் மிக மிக அழகாகவும் விளக்கமாகவும் இருக்கின்றது.இப்பின்னல் தெரியாதவர்களுக்குக் கூட இதைப் பார்த்து தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.வீட்டில் வேலைக்குப் போகாமல் இருப்பவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். எனக்கும் குழந்தைகளுக்குப் போடும் கால்மேஸ்,தொப்பி,சுவெட்டர் என்பன பின்னும் விளக்கம் தேவை.தயவு செய்து உதவி செய்வீர்களா? குரோசே
அன்பின் நர்மதா!
உங்களின் கைத்திறமைகள் மிக மிக அழகாகவும் விளக்கமாகவும் இருக்கின்றது.இப்பின்னல் தெரியாதவர்களுக்குக் கூட இதைப் பார்த்து தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.வீட்டில் வேலைக்குப் போகாமல் இருப்பவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். எனக்கும் குழந்தைகளுக்குப் போடும் கால்மேஸ்,தொப்பி,சுவெட்டர் என்பன பின்னும் விளக்கம் தேவை.தயவு செய்து உதவி செய்வீர்களா? குரோசே
அன்பின் நர்மதா!
உங்களின் கைத்திறமைகள் மிக மிக அழகாகவும் விளக்கமாகவும் இருக்கின்றது.இப்பின்னல் தெரியாதவர்களுக்குக் கூட இதைப் பார்த்து தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.வீட்டில் வேலைக்குப் போகாமல் இருப்பவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். எனக்கும் குழந்தைகளுக்குப் போடும் கால்மேஸ்,தொப்பி,சுவெட்டர் என்பன பின்னும் விளக்கம் தேவை.தயவு செய்து உதவி செய்வீர்களா?

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta