கர்ப்பகால சந்தேகங்கள்

எனக்கு உள்ள சந்தேகங்களை கேட்டுள்ளேன்... விடை கொடுங்கள் தோழிகளே..7 மாதம் பிறக்கப்போகிறது.
1.சீரக கஷாயம் குடிக்கலாமா? அதனால் நீர் அதிகமாய் போய் உள்ளே தண்ணீர் குழந்தைக்கு கம்மியாகுமா?
2.தேன் சேர்க்கலாமா? பழங்களுடன் தேன் சேர்த்து சாப்பிடலாமா?
3.குங்குமப்பூவின் பலன் சூடு அமர்த்துவது மற்றும் குழந்தை நிறமாகா பிறப்பது மட்டுமா இல்லை வேறு பலன்கள் உள்ளனவா? குங்குமப்பூ இப்போ சாப்பிடலாமா?
4.டாக்டர் கொடுத்த அயர்ன் மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்கிறார்கள் உண்மையா?
5.ஒருபுறமாக படுத்து உடம்பு வலிக்கும் பட்சத்தில் சிறிது நேரம் மல்லாந்து படுக்கலாமா?
6.வயிற்றில் கோடுகள் வராமல் இருக்க நல்லெண்ணெய் மஞ்சள் கலந்து தினமும் தேய்க்க வேண்டுமா?(இந்த குறிப்பு ஜெயந்திமாமி எழுதியதாக ஞாபகம்) வேறு வீட்டுமருந்து எதுவும் இருக்கிறதா? ஆயின்மென்ட் உபயோகிக்கலாமா? டாக்டரிடம் கேட்க வேண்டுமா? பிரான்ச் ஆயில் பலன் தருமா?
7.குழந்தையின் நலத்திற்கும் வளர்ச்சிகும் எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கலாம், பாடல்கள் கேட்கலாம்?

ஜீவா மேடம்....... என் பெயர் பிரபா. முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்......... எனக்கு இந்த வெப்சைட் கிடைத்தது. இது உங்கலுக் உதவும் என்று நினைக்கின்ரேன். "கரு முதல் தாய்மை வரை" புத்தகம் தமிழில் உள்ளது. http:// senthilvayal.wordpress.com/
2008/04/14/ இந்த வெப்சைட்டில் முக்கியமான தகவல் உள்ளது. ''வாழ்க வளமுடன்.''

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

யாராவது விடை கூறுங்களேன்..

எனது சந்தேகங்கள் என சிலவற்றை கேட்டிருந்தேன்.யாருமே பதில் சொல்லவில்லை. யாராவது கூறுங்களேன். நன்றி பிரபா. அந்த வலைதளத்தில் எனக்கு தேவையான தகவல் இருப்பதாய் தெரியவில்லை. அந்த புத்தகம் என்னால் எடுக்க முடியலை. வேறு லிங் இருந்தால் கொடுங்களென்
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

இத்தனை கேள்விகளா?எனக்கு தெரிஞ்சதை மட்டும் சொல்லுறேன்..

குங்கும பூ தாராளமாக சாப்டலாம் அளவுக்கு மீறாமல் சாப்டனும் சரியா குழந்தைக்கு இதை குடிச்சால் நிறம் வரும் என்பதெல்லாம் பைத்தியகார தனம்..அதிகமானால்நிறம் போகும் என்பது உருதி :D

இது இரத்தத்தை சுத்தபடுத்தும்..

அய்யோ அப்படிலாமில்லை அயர்ர்ன் மாத்திரையை தவறாமல் சாப்டுங்க!!

தாராளமாக படுக்கலாம் கொஞ்ச நேரம் மட்டுமே அடிக்கடி இப்படீ படுக்க கூடாது குழந்தைக்கு மூச்சுதினரல் வரும்...8 மாசம்னா சுத்தமாக இப்படி படுக்க கூடாது..மற்பக்கம் ஒருங்கனித்து படுங்க எழுந்து அப்ப்புறமாக திரும்பி படுக்கனும்,,

எனக்கு தெரிஞ்சு பலூனை எடுத்துகங்க அதை ஊத ஊத விரிவடையும் அப்ப சுறுங்கும் போது பழையபடி வருமா சொல்லுங்க அதூபோலதான் வயிறும் கோடுகள் விழுவது சகஜமே ஆயின்மெண்ட் எந்த அளவுக்கு நல்லதுன்னு தெரியல..எனக்கு தெரிஞ்சு ஆயின்மெண்ட் வேஸ்ட்தான் ஜெ.மாமி சோன்னது நல்லதாக இருக்கலாம்னு தோனுது இன்னொரு முறை கேட்ட்பின் டிரை செய்யுங்கள்

நல்ல விஷயங்கள் எல்லாவற்றையும் படிக்கலாம் பார்கலாம் போதுமா :D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

1)ஜீவா அளவை மிஞ்சினால் அமுதமும் நஞ்சு..என்னைப் பொறுத்தவரை கர்ப்பம் என்று எக்ஸ்ட்ராவா ஓவெர் ஃபிட்டிங் பன்னிவிடாமல் சத்தானதாக அதிகப்படியான பழம் காய்கறி சேர்த்துக்குங்க..மத்தது எல்லாம் மெனக்கேடு என்ற் சொல்லுவேன்
2)பழங்களுடன் தேன் சேர்த்து சாப்பிடுங்க் தப்பில்லை ஆனால் முதல் பாயின்ட்டில் வரும் சொல் நியாபகம் இருக்கட்டும்
3)எனக்குத் தெரிஞ்சு குங்குமப் பூ ஒரு வெத்து வேஸ்ட்..அந்த காசுக்கு அவகாடோ பழம்,கேரட்,பேரீச்சை பழம்,தேன் வாங்கி குடிக்கலாம்
4)கண்டிப்பா இல்லை டாக்டர் கொடுத்ததை சாப்பிடுங்கள்..சும்மா அப்பா அம்மா கறுப்புன்னு ஒத்துக்கொள்ளாமல் இருக்க ஐய்ரன் மாத்திரை மேல் பழியை போடுகிறார்கள்
5)சிறிது நேரம் ஒரு 10 நிமிடம் படுக்கலாம் தப்பில்லை..அதிக நேரம் வேண்டாம் ஆனால் தவிர்க்க பாருங்கள்
6)மாமி வைத்தியம் பலன் தரும்.நிறைய தண்ணீர் குடியுங்க கோடு விழுவது குறையும்
7)மெல்லிய அமைதியான இசை அல்லது இன்ஸ்ட்ருமென்டல் பாடல்கள் கேளுங்க்..முக்கியமா புல்லாங்குழல் இசை அமைதியை தரும்...எல்லா வகையான புத்தகங்களும் படிக்கலாம் ஏனென்றால் புத்தகத்தில நல்லது கெட்டது இல்லை...பயம் திகில் துன்பம் போன்றவற்றை படிக்காதீங்க..வாழ்த்துக்கள்

அன்பு ஜீவா,
தாயாகப் போகும் உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

1. சீரக கஷாயம் எவ்வளவு வேணும்னாலும் குடிக்கலாம். நீர் அதிகம் போய் குழந்தைக்கு தண்ணீர் குறையாது. இந்த கஷாயம் குடித்தால் சூட்டு வயிறுவலி சரியாகும். பொய் இடுப்புவலி போகும்.

2. தேன் சேர்க்கலாம் அளவோடு.

3.குங்குமப்பூவில் ஒரு பலனும் இல்லை. குழந்தை சிவப்பா பிறக்கும்ங்கிறது எல்லாம் சும்மா!

4.அயர்ன் மாத்திரை சாப்பிடுவதால் குழந்தை கருப்பாகாது. காரம் அதிகமாக, ரொம்ப சூடாக சாப்பிட்டால் குழந்தையின் நிறம் பாதிக்கும். அயர்ன் சாப்பிட்டால் சிலருக்கு மலச்சிக்கல் வரும். அப்ப குறைத்துக் கொள்ளலாம். அதுக்கு பதிலாக முருங்கைக்கீரை, ராகி சாப்பிடலாம்.

5. 7 மாதம் வரை சிறிது நேரம் 10 நிமிடம் போல் படுக்கலாம். அதன்பின் வேண்டாம். ரொம்ப வலித்தால் எழுந்து ஒரு நடை நடந்து விட்டு படுக்கலாம்.

6. நல்லெண்ணெய், மஞ்சள் தடவலாம். தேங்காய் எண்ணெய் இப்ப இருந்தே தடவலாம். விட்டமின் இ ஆயிலும் இப்ப இருந்தே தடவலாம். முழுசும் இல்லைன்னாலும் குறையவாவது செய்யும்.

7. இப்ப இருக்கிறவங்க தான் வெப்சைட், புக் படிக்கிறாங்க. நானெல்லாம் எதுவும் படிக்கலைப்பா. எல்லாம் அனுபவம் தான். அம்மாவைத் தவிர வேறு நல்ல புத்தகம் உண்டா?

மீண்டும் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி மர்ழி,தாளிகா மற்றும் செல்வி அக்கா.. யாருமே பதில் சொல்லவில்லை என்று கவலையாக இருந்தேன். நீங்கள் கூறியது போலவே செய்கிறேன். மேலும் வீடு பெறுக்குவது, நடப்பது நல்லது என்றார்கள். வேறு என்ன வேலைகள் எல்லாம் செய்யலாம், செய்யவேண்டாம்?
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

பெருக்குவது எல்லாம் நல்ல விஷயம்தான் நார்மல் டெலிவரிக்கு ரொம்பவே நல்லது..ஆனா இதுக்கு எங்களிடம் ஆலோசனை கேட்க கூடாது டாக்டரிடம்தான் கேட்கனும் உங்க உடல்நிலை அவருக்குதானே தெரியும்!!ஒவோருவரின் ஒடல்வாக்கும் உவ்வொரு வகை இப்ப என்னை எடுத்தீங்கன்னா அதிகமா நடக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க எனக்கோ நடக்க, எங்காவது ஓடனும்னு ஆசை :D என்ன செய்ய எல்லாம் நேரம்னு 3 மாசம்தான்னு பொறுத்துட்டு இஉர்க்கேன்...நீங்க ரொம்ப நார்மலான ஸ்டேஜில் இருந்தால் தாராளமாக நடக்கலாம் கொஞ்சம் கோணலாக இருந்தாலும் (என்னை போல)இபப்டிலாம் செய்வது பிராப்லமாகிடும் சோ பெஸ்ட் டாக்டர்ட்ட கேளுங்க ஓகேவா!!

தளி உன் பதிவு செம ஜோக்கு போ!!ஆமாப்பா நான் குங்குமபூலாம் சாப்டதே இல்லை அதுக்கு வேற ஏதும் வாங்கிடலாம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தோழி
களே நான் 3 மாதம்
கற்பமாக இருக்கிறேன்.நான் உணவில் நல்லெண்ணை சேர்க்கலாமா

மேலும் சில பதிவுகள்