குழந்தைகள் ஸ்பெசல்

இந்த கட்டுரை நான் குமுதம்சிநேகிதியில் படித்தேன்.தோழிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த கட்டுரை கொஞ்சம் பெரிது தான் ஆனால் எல்லோரும் படிக்க வேண்டியது.

நம் வீட்டுக் குழந்தைகள் கொஞ்சம் பெரிய மனுஷத்தனமாகப் பேச ஆரம்பித்துவிட்டாலே அவர்களைப் பெரியவர்கள் லிஸ்ட்டில் சேர்த்து, அவர்கள் உணவின்மீது நாம் சரியான கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகிறோம்.

ஆனால் குழந்தைகள் தினத்துக்கு சொந்தக்காரரான நேருஜி, ஒரு குழந்தை பதினான்கு வயதைக் கடக்கும்வரை அவர்கள் குழந்தைகள்தான் என்கிறார். எனவே, பதினான்கு வயது வரைக்கும் குழந்தைகளை குழந்தைகளாகவே பாருங்கள், அவர்கள் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இதோ எந்தெந்த வயதுக்குழந்தைகளுக்கு, என்னென்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார் டயட்டீஷியன் வீணாசேகர்.

0-6 மாதங்கள் வரை :

தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை எனும் பட்சத்தில் அரிசிக்கஞ்சி, பருப்புத் தண்ணீர், ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ், காய்கறி சூப் கொடுக்கலாம். அதிலும் பாதிக்குப் பாதி ஆறிய வெந்நீர் சேர்த்து, முதன் முறையாக கொடுக்கும்போது அரை டீஸ்பூன் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தை உடல் அதை ஏற்றுக் கொண்டு, மறுநாள் எந்தத் தொந்தரவுமின்றி ஆரோக்கியமாக இருந்தால், அதே அரை டீஸ்பூன் மறுநாளும் கொடுங்கள். மெது மெதுவாக அதை ஒரு டீஸ்பூன் அளவாக உயர்த்திக் கொள்ளலாம். ஆனால், எது கொடுத்தாலும் பாதிக்குப் பாதி தண்ணீர் கலப்பதை மறந்துவிட வேண்டாம். அப்போதுதான் குழந்தையால் ஜீரணிக்க முடியும்.

6 லிருந்து 8 மாதம் வரை :

இந்தத் தருணத்தில் குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத்தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம்.

9லிருந்து 10 மாதம் வரை :

இந்த சமயத்தில்தான் குழந்தைக்குப் பல்முளைக்கும். மென்று சாப்பிடும் உணவுகளை ரசித்துச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிப்ஸ் போன்றவைகளை அதிகம் வாங்கிக் கொடுத்துப் பழக்கிவிட்டால், குழந்தைகள் லைஃப்லாங் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள். எனவே குழந்தைக்கு ஊளைச்சதை போட்டுவிடாதபடியும், அவர்கள் சிப்ஸ் மாதிரியான உணவுகளை ருசித்துப் பார்த்துவிட முடியாதபடியும் கவனமாக இருங்கள். குழந்தைகள் கடிப்பதற்கு வசதியாக ஆப்பிள், காரட் போன்று கொடுத்துப் பழக்குங்கள். வீட்டில் செய்த இனிப்பு, லேசான காரம், லேசான புளிப்பு உணவு வகைகளையும் கொடுத்து பழக்கப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தை எல்லா சுவைக்கும் பழக்கப்படும்.

10லிருந்து 12 மாதங்கள் வரை :

இந்தப் பருவத்தில் குழந்தைகள் உணவின் கலரை பிடித்துப்போய் சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்த தருணத்தில் நமது பாரம்பரிய உணவையே வகைவகையாக சமைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம். கலர்கலரான காய்கறிகளைச் சாப்பிட வைக்கலாம். ஸ்நாக்ஸுக்கு கடைகளில் விற்கும் சிப்ஸ் அது இதுவென்று கொடுக்காமல், வேகவைத்த வேர்க்கடலை, எண்ணெயின்றி வறுத்த வேர்க்கடலை, எனர்ஜி மில்க், வேகவைத்த தானியங்கள், முளை கட்டிய தானியங்களை பவுடராக்கி கஞ்சி வைத்து, இப்படி விதவிதமாகக் கொடுக்கலாம். காரணம், இந்தச்சமயம் குழந்தைகளின் வளர்ச்சி ஆரம்பிக்கும் சமயம். தண்ணீர் அதிகம் கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட உணவுமுறை இல்லாவிட்டால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படும். தினம் அதிகாலை மலம் கழிக்கும் பழக்கம் இல்லாமலே போய்விடும். இதனால் உடல்வளர்ச்சி, மூளைவளர்ச்சி பாதிக்கப்படும். எனவே இந்தச் சமயம் குழந்தைகள் உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

1லிருந்து 3 வயது வரை :

இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கி உணவு ஊட்டுவது என்பது மிகக் கடினமான வேலை. புதிது புதிதாக சுவையை மாற்றி மாற்றிக் கொடுத்து உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கவேண்டும். நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

3 வயதிற்கு மேல் :

குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது. என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து லன்ச் கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை ப்ரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு டின்னரில் நீங்கள் வெகு அலர்ட்டாக இருக்கவேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய நியூட்ரிஷியன்ஸ் இல்லாமல் குழந்தைகள் நார்மல் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.

இட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக் சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், மிக்ஸ்ட் ரைஸ், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.

புளிக்காத, ஃப்ரிட்ஜில் வைக்காத தயிர்சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.

12லிருந்து 14 வயது வரை :

இந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு அபார வளர்ச்சி உண்டாகும். பெண் குழந்தைகளுக்குத்தான் அபாரவளர்ச்சி இந்த சமயத்தில் ஏற்படும். எனவே நிறைய நியூட்ரிஷியன்ஸ், புரதம், இரும்புச்சத்து, விட்டமின்ஸ், மினரல்ஸ் என எல்லாவிதமான சத்துகளும் தேவைப்படும். சில பெண் குழந்தைகள் பூப்பெய்துவிடும் வயது என்பதால் நிறைய அயர்ன் தேவைப்படும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

அதே சமயம் நிறைய ஊளைச்சதைபோடும் இந்த வயதில் ஜங்க் ஃபுட் தவிர்த்தால்தான் உடலில் எதிர்ப்புச்சக்தி கூடும். பின் நாட்களில் நோய் அணுகாமல் தடுக்க இந்த வயதில் குழந்தைகள் சாப்பிடும் உணவுதான் தாங்கிப் பிடிக்கும். எனவே கவனமாக இருங்கள். வீட்டிலேயே விதவிதமான உணவுகளை குழந்தைகளுக்குத் தயாரித்துக் கொடுத்து அவர்களை சாப்பிட வைத்து அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ரசியுங்கள்.

ஆண் குழந்தைகளுக்கும் இதுதான் அபார வளர்ச்சி பீரியட் என்பதால், அவர்களுக்கும் மேற்கண்ட உணவுமுறைகளைப் பின்பற்றச் செய்து வளருங்கள்.

சரியான டயட்டின்றி டீன்ஏஜில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

பரு :

ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து வீட்டுச் சாப்பாட்டைத் தவிர்த்து ஹோட்டல்களில் சாப்பிடுவதால் உண்டாகும் இந்த பிரச்னைக்குக் காரணம் ஹோட்டல்களின் கலர் கெமிக்கல்ஸ், ஃபேட்டி ஆயில்ஸ் உணவுகள்.

முடி உதிருதல் :

செல்ஃப் இமேஜை வளர்த்துக் கொள்ள இளைக்கிறேன் பேர்வழி என சாப்பிடாமல் தவிர்ப்பது. பசிக்கிறது என கண்டதை வெளியில் சாப்பிட்டு விடுவது... இவைகளால் மலச்சிக்கல். அதன் பாதிப்பாக முடிஉதிருதல்.

கருவளையம் :

ே கருவளையமும் மேற்கண்ட உணவு முறையில் வருவதுதான். நிறைய சீஸ், வெண்ணெய் சாப்பிட்டு செரிக்கும் தன்மையிழந்து மலச்சிக்கல் வந்து, உடல் ஆரோக்கியம் கெட்டு கண்களைச் சுற்றி கருவளையம் உண்டாகிறது.

இதைத் தவிர்ப்பதெப்படி?

ே தண்ணீர் நிறையக் குடிக்க வையுங்கள்.

ே பச்சைக் காய்கறிகளை சாலட் செய்து கொடுங்கள்.

ே பழ வகைகளைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

-எழில்செல்வி
படங்கள் : எஸ். சுரேஷ்

இந்தக்கால பொடிசுகளிடம் கண்ணை உருட்டி, கோபத்தைக் காட்டியெல்லாம் உங்கள் பேச்சை கேட்க வைக்க முடியாது. கொஞ்சம் புத்திசாலித்தனமான அப்ரோச்தான் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி செய்யும்.

ஸ ``ஹோம் வொர்க் முடிச்சவுடன் நீயே கார்ட்டூன் சேனல் வச்சி பார்த்துப்பியாம்'' என்று டி.வி. ரிமோட்டை பிள்ளைகளிடமே கொடுத்துப் பாருங்கள். நீங்கள் சொல்லாமலேயே ஹோம்வொர்க் நோட்டும் கையுமாக உட்கார்ந்து விடுவார்கள்.

ஸ ``ஏன் எதுக்குனு கேள்வி கேட்காம சொன்னதைச் செய்'' என்று அதிகாரம் செய்யாமல், ``அம்மா எது சொன்னாலும் உன்னோட நல்லதுக்குதானே சொல்வேன் கண்ணம்மா'' என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகள் நீங்கள் கிழித்த கோட்டைத் தாண்டாது.

ஸ அழகாக படம் வரையும் உங்கள் குழந்தையிடம் ``எதிர் வீட்டு நிஷா எவ்ளோ அழகா டான்ஸ் ஆடுறா. நீயும் இருக்கியே'' என்று தயவு செய்து பேசி விடாதீர்கள். ரோஜாச் செடியிடம் கத்தரிக்காயை எதிர்பார்க்கும் உங்களுடைய இந்த குணத்தால், உங்கள் பிள்ளை உங்கள் பேச்சுக்குக் காது கொடுக்காமலே போய்விடலாம்.

ஸ உங்கள் வீட்டு வாண்டின் லூட்டி உங்களை ரொம்ம்ம்...ப வெறுப்பேற்றும்போது, குழந்தைகளை அடித்தோ அல்லது உங்கள் தலையில் அடித்துக் கொண்டு கத்தியோ கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். கொஞ்ச நேரம் மௌனமாக இருங்கள். கோபத்தைவிட உங்கள் மௌனத்துக்கு அதிகமாகக் கீழ்ப்படிவார்கள் உங்கள் குழந்தைகள்.

ஸ இந்த மௌனத்துக்கும் பயப்படாத `படா வாலு'களும் இருக்கிறது. இதுகளிடம் `நீ என்ன வால்தனம் செய்தாலும் அம்மா உம்மேல அன்பாத்தான் இருப்பேன்' என்பதை செயலில் காட்டி வாருங்கள். அந்தப் பொல்லாத பொடிசுகளே தங்கள் வால்களை வெட்டிப் போட்டு விடும்!

ஸ ரொம்பவே முக்கியம்... குழந்தைகளைக் குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். அவர்கள் நல்லது செய்யும்போது உடனே பாராட்டி விடுங்கள்.

தொகுப்பு: ஆ.சாந்தி

கருவிலிருக்கும் ஒரு குழந்தை தனக்குத் தேவை யான உணவு, ஆக்ஸிஜன், வெப்பம் ஆகியவற்றைத் தாயிடமிருந்து எடுத்துக் கொள்வதாலும், மலம், சிறுநீரை தாயின் மூலமே வெளியேற்றுவதாலும் கருவிலிருக்கும் போது குழந்தையின் சுவாசப்பை, ஈரல் இரண்டுக்குமே வேலையில்லையாம்! அந்தக் குழந்தை இந்த உலகில் பிறந்தவுடனேதான், தானாக மூச்சுவிடுகிறது. மலம், சிறுநீர் கழிக்கிறது. கர்ப்பப்பையிலிருந்து வெளிவந்தவுடனே வெளியுலகுக்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறது. புத்தம் புதிதாய்ப் பிறந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையை கண்ணும் கருத்துமாய் பராமரிக்க நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டாமா? இதோ பராமரிக்க சில யோசனைகள் சொல்கிறார் பச்சிளம் குழந்தை நிபுணர் டாக்டர். ரமேஷ்.

ே 37-லிருந்து 42- வாரங்கள் வரை கர்ப்பப்பையில் வளர்ந்த சிசுவையே முழுவளர்ச்சியடைந்த குழந்தை என்கிறோம். 37 வாரங்களுக்கு முன்பாக பிறக்கும் குழந்தை குறைப்பிரசவ குழந்தை. எனவே அந்தக் குழந்தைக்கு சிறப்புக் கவனம் தேவை.

ே குழந்தை பிறந்ததும் இரண்டரை கிலோவிலிருந்து மூன்றரை கிலோ வரை இருக்க வேண்டும்.

ே சராசரி எடையுடன் முழுவளர்ச்சியடைந்த குழந்தை பிறந்த 5 நிமிடத்திற்குள் அழவேண்டும். குழந்தை அழுதால்தான் சுவாச உறுப்புகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன என்று அர்த்தம்.

ே குழந்தையின் உடல் வெளிர் ரோஜா நிறத்தில் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் குழந்தையின் இதயம் ஆரோக்யமாக இருக்கிறது என்று அர்த்தம்.

ே பிறந்தவுடன் குழந்தை தன் கை, கால்களை அசைக்கும், தும்மும்... அப்படியிருந்தால்தான் குழந்தையின் நரம்பு மண்டலமும் தசைகளும் நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

ே பிறந்தவுடன் குழந்தை சிறுநீர், மலம் கழித்தால்தான் ஜீரண சக்தி, சிறுநீரகம், ஈரல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். சில குழந்தைகளுக்கு 24 மணிநேரம் கழித்தும் ஏற்படலாம். எனவே பயப்படத் தேவையில்லை.

ே பிறந்ததிலிருந்து மூன்று நாட்களுக்கு மலம் கறுப்பாக இருக்கும். பிறகுதான் நார்மல் நிறம் வரும்.

ே குழந்தை பிறந்த 3 நாட்கள்வரை கண்கள் லேசான மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். சில சமயம் உடல்கூட மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் காமாலையோ என்று பயந்துவிட வேண்டாம். குழந்தையின் ஈரல் வளர்ச்சி குறைபாடாகக்கூட இருக்கலாம். இந்தக் குறைபாடு குறைமாதக் குழந்தைக்கு ஏற்படலாம்.

ே குழந்தை சுணக்கமாக இருந்தாலும், சரியாகப் பால் குடிக்காவிட்டாலும், மலம் வெள்ளையாக இருந்தாலும், அது 2 வாரத்திற்குள் சரியாகாவிட்டால் உடனே மருத்துவரிடம் காண்பியுங்கள்.

ே பிறந்து ஒருவாரம் வரை உடலிலுள்ள நீர் வற்றுவதால் குழந்தை எடைகுறையும். எடை குறைந்த குழந்தைகளை முக்கியமாக குளிர்காலங்களில் கம்பளி உடை உடுத்தி கதகதப்பாக வைத்திருத்தல் அவசியம்.

ே குழந்தையின் உடல் சில சமயங்களில் சூடாக இருக்கும். அதிக அளவு உடை, சுற்றுப்புறச்சூழல், எப்போதும் தாய் அணைத்தே வைத்திருத்தல் போன்ற காரணங்களால் உடல் சூடாக இருக்கும். ஜுரமோ என்று பயந்துவிடாமல், காற்றோட்டமாக வைத்திருப்பதன் மூலமும், தாய்ப்பால் அடிக்கடி கொடுப்பதன் மூலமும் இதைத் தவிர்க்கலாம்.

ே குழந்தை பிறந்த அரை மணி நேரம் வரை விழித்திருக்கும். அந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அரை மணிநேரத்திற்குப் பின் தூங்க ஆரம்பித்துவிடும்.

ே குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தால், தாய்க்கும் பால் சுரப்பது எளிதாகும்.

ே தாயின் முதல் பாலான சீம்பால் கொடுப்பதன் மூலம், குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ே தாய்ப்பால் கொடுப்பதால் ஒருவித அன்னியோன்யம் ஏற்பட்டு தாய்-சேய் உறவும் பலப்படுகிறது.

ே குழந்தை பாலுக்கு அழும்போதெல்லாம் தாய்ப்பால் புகட்டவேண்டும்.

ே குழந்தையும், தாயும் ஒரே படுக்கையில் படுப்பது அவசியம்.

ே பால் கொடுக்கும்போது தாய் முடிந்தவரை உட்கார்ந்த நிலையில் குழந்தையை மார்போடு அணைத்து, மார்புக்காம்பை மட்டும் குழந்தையின் வாயில் வைக்காமல் காம்பைச் சுற்றிய கறுப்புப் பகுதியையும் குழந்தையின் வாயில் வைத்துக் கொடுக்க வேண்டும்.

வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு...

ே வேலைக்குப் போகும் தாய்மார்கள், முதல் நான்கு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுத்தே ஆக வேண்டும்.

ே வேலைக்குச் செல்ல நேரும்போது தாய்ப்பாலை பீய்ச்சி எடுத்து ஒரு சுத்தமான கிண்ணத்தில் வைத்துவிட்டுச் செல்லலாம். குழந்தைக்குப் பசிக்கும்போது அந்தப்பாலை மற்றவர்கள் புகட்டலாம். ஃப்ரிட்ஜில் வைக்க அவசியம் இல்லை. இது 3 அல்லது 4 மணி நேரங்கள் தாங்கும்! அதற்கு அப்புறம் தேவைப்பட்டால் வேறு ஏதேனும் உணவை குழந்தைக்கு தாருங்கள்!

புத்தம்புதுக் குழந்தைகள்... அதன் பிரச்னைகள்...

ே அடிக்கடி தும்முவது... மூக்கடைத்து திக்குமுக்காடுவது... மூக்கு, தொண்டையில் கரகரவென்ற சப்தம்... மூக்கிலிருந்து சில சமயம் நீர்வடிதல்... சீராக மூச்சு விடாமல் வேகமாக அல்லது மெதுவாக மூச்சுவிடுவது... சில வினாடிகள் மூச்சுவிடாமல் இருப்பது... இவையெல்லாம் இயற்கைதான். இதனால் எந்த பாதிப்பும் வராது. நன்றாகப் பால்குடிக்கும். எப்போதும்போல் குழந்தை நார்மலாகவேஇருக்கும்.

ே குழந்தை படுத்திருக்கும்போது முகத்தில் நேராக ஃபேன் காற்றோ, ஏசியோ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீர், மலம் போவது பற்றி:

ே சிறுநீர், மலம் அடிக்கடி கழித்தல் என்பது புதிதாய்ப் பிறந்த குழந்தைக்கு இயற்கைதான்.

ே சிறுநீர், மலம் போகும் போது குழந்தை உடலை முறுக்குவதும், அழுதுகொண்டே போவதும் இயற்கைதான். வயிற்றில் போதுமான அளவு அழுத்தத்தை உருவாக்கி மலம், அல்லது சிறுநீர் கழிக்கும். படுத்த நிலையில் குழந்தை இருப்பதால், இந்த அழுத்தம் தேவையாகிறது.இதனை தவறாக மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு, சிறுநீர்போக கஷ்டப்படுகிறது என்று நினைக்க வேண்டாம்.

ே ஆரம்ப மூன்று மாதம் முதல் குழந்தை 10 தடவைகளுக்கு மேல் சிறிது சிறிதாக மலம் போவது நார்மல்தான். பால் குடித்தவுடனே மலம்போவதும் இயற்கைதான். இதனை வயிற்றுப்போக்கு என நினைக்கக் கூடாது.

ே சில குழந்தைகள் மூன்று நாட்களுக்கொருமுறை மலம் போகும். இதனை மலச்சிக்கல் என நினைத்து மருந்தோ, சோப்போ, குச்சியோ குழந்தையின் ஆசனவாயில் வைக்கக் கூடாது. காற்று நன்றாகப் பிரிந்து கொண்டும், தேவையான அளவு எடைகூடிக் கொண்டும் இருந்தால் கவலை வேண்டாம். இது, தாய்ப்பால் மட்டுமே பருகும் குழந்தைக்கு மட்டும்தான் பொருந்தும்.

குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்பதை நீங்களே தெரிந்துகொள்ள சில கேள்விகள்.

ே ஒரு நாளைக்கு 6 தடவையாவது குழந்தை சிறுநீர் கழிக்கிறதா?

ே ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குழந்தை மலம் கழிக்கிறதா?

ே ஒவ்வொரு மார்பிலும் குறைந்தது 15 நிமிடம் பால் குடிக்கிறதா?

ே போதுமான அளவு எடை கூடுகிறதா? அதாவது மாதத்துக்கு சுமார் 600 கிராம் வரை எடை கூடுகிறதா?

மேற்கண்ட கேள்விகளுக்கு உங்கள் பதில் ``ஆம்'' என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான பால், உங்களிடம் சுரக்கிறது என்று அர்த்தம்.

பச்சிளம் குழந்தைகளை பாட்டி வைத்தியத்தின் மூலம் எப்படி பராமரிப்பது என்று சொல்கிறார் மூத்த குடும்பத் தலைவி பி.பத்மா.

ே குழந்தைக்கு சாஃப்ட்டான காட்டன் துணிகளிலேயே டிரஸ் போடுங்கள்.

ே குழந்தைகளின் உடையில் ஷோல்டரில் முடிபோடுவது மாதிரியான உடைகளை மட்டுமே பார்த்து தேர்ந்தெடுங்கள். பட்டன், ஹுக் பொருத்திய உடைகளைத் தவிர்க்கவும்.

ே அடிக்கடி தொட்டிலிலேயே போட்டுவிடாமல், சாஃப்ட்டான படுக்கையில் படுக்க வைக்கவும். இரண்டு பக்கமும் அரவணைப்புக்கு தலையணை வைக்கவும்.

ே பால் சுரக்கவில்லை என்று சும்மா சொல்லிக் கொண்டிருக்காமல், குழந்தையை நன்றாகப் பால்குடிக்க வைத்து, மார்புக்காம்பை சப்ப வைத்தால், பால் தானே ஊற ஆரம்பித்து விடும்.

ே குழந்தை அயர்ந்து தூங்கும்போது கோடைக்காலம் என்றால் பாதங்களை மட்டும், குளிர்காலம் என்றால் உடல்முழுவதையும் சாஃப்ட்டான துணியால் போர்த்தி வையுங்கள்.

ே குழந்தை தூங்கும் அறை காற்றோட்டம் உள்ளதாகவும், வெளிச்சம் நிறைந்ததாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ே குழந்தையின் அறையில் நுழைந்து விருந்தாளிகள் அடிக்கடி பார்ப்பது, அல்லது அந்த அறையில் நிறைய பொருள்களைக் குவித்து வைத்திருப்பது போன்றவற்றைத் தவிருங்கள். இதனால் குழந்தைக்கு ஏதாவது இன்ஃபெக்ஷன் வரலாம்.

ே குழந்தையின் அறையில் தொலைக்காட்சி, ரேடியோ சப்தங்கள் இருக்கக்கூடாது.

ே குழந்தைக்கு எந்த தொந்திரவுகளும் இல்லாத ஆழ்ந்த உறக்கம் மிகமிக முக்கியம்.

ே குழந்தைகளை பசிக்கு நிறைய நேரம் அழவிடாமல் உடனே பால் கொடுத்து விட வேண்டும். காரணம், நிறைய நேரம் அழுவதால் காற்றும் உள்ளே போய் குழந்தையின் வயிறு உப்பி விடும்.

ே குழந்தை சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருந்தால், உடனே துணியை மாற்றுங்கள்.

ே கடைகளில் விற்கும் குழந்தைகள் நாப்கினை வாங்க முடியாதவர்கள் மெல்லிய காட்டன் துணிகளை உபயோகிக்கலாம். துவைத்து அலசும் போது, டெட்டால் கலந்த நீரில் ஒருமுறை அலசவேண்டும்.

ேஅதிகாலையில் தேங்காய் எண்ணெயை உடல் முழுக்கத் தடவி, காலை இளம்வெயிலில் குழந்தைக்கு சன் பாத் எடுக்க வேண்டும். சூரிய ஒளியின் `விட்டமின் டி' குழந்தைக்கு முக்கியத்தேவையாகிறது. வெளிநாடுகளின் மருத்துவமனைகளில் `விட்டமின் டி' விளக்கு பயன்படுத்துகிறார்கள்.

ே தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு மிக சுத்தமான உணவு என்பதை உணருங்கள்.

ே குளிப்பாட்டியவுடன் கூடுமானவரை பவுடர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. இது குழந்தையின் மூக்கில் நுழைந்தால் சுவாசத்தை பாதிக்கும். கவனமாகப் பவுடரைத் தொட்டுத் தடவத் தெரியாதவர்கள் பவுடரைத் தவிர்ப்பதே நல்லது.

ே குழந்தைகளுக்கான தடுப்பூசி முறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்.

ே உறவினர்கள் பரிசளிக்கும் நகைகளை, நீங்கள் கையில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குழந்தைக்கு நகையே வேண்டாம்.

ே கடைகளில் விற்கும் கண் மைகளால் குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். எனவே குழந்தைக்கு மையிடுவதைத் தவிர்க்கவும்.

ே எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டே இருக்காதீர்கள்.

ே பால் கொடுத்தவுடன் தோளில் போட்டு தட்டிக்கொடுங்கள். ஏப்பம் வந்தபிறகு சிறிது நேரம் கழித்து படுக்கையில் போடுங்கள்.

ே குழந்தையின் அருகில் மற்ற சிறு குழந்தைகளை விடாதீர்கள்.

ே குளிப்பாட்டியவுடன் ஓமம் மற்றும் வெற்றிலையைத் தட்டி, வடிகட்டி அந்தச்சாறுடன் வசம்பைச் சுட்டு இழைத்து கலந்து அதோடு பூண்டையும் உரசி தாய்ப்பால் கலந்து குழந்தைக்கு அரை டீஸ்பூன் அளவு பாலாடையில் புகட்டினால், குழந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கும். அயர்ந்து தூங்கும்.

ே பெரிய மருத்துவமனைகளில் இளம் தாய்மார்களுக்கு குழந்தைகளை எப்படிப் பேண வேண்டும். தங்கள் உடல்நலனை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் டிரெயினிங் தருகிறார்கள். பெரிய மருத்துவமனைகளில் இதைத் தவறாமல் தாய்மார்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ே ஜாதிக்காய், மாசிக்காய், திப்பிலி, ஓமம், வெல்லம், கஸ்தூரி மஞ்சள், பிள்ளை மஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து அரைத்து உருண்டையாக்கி தாய்க்கு சாப்பிடக்கொடுத்தால், அல்லது இவைகளில் வற்றல்குழம்பு வைத்து சாப்பிட்டால், தாய்-சேய் நலம் கிடைக்கும்.

பிறந்த குழந்தைக்கு நகை வேண்டாமே...

``என் குழந்தைக்கு சிவப்புக்கல் மோதிரம் ஒன்றை உறவினர் ஆசையோடு அணிவித்தார். திடீரென்று மோதிரத்தைக் காணவில்லை. குழந்தைதான் விழுங்கிவிட்டதோ என்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, குழந்தையின் வயிற்றில் இல்லை. வேலைக்காரி மேல் சந்தேகப்படும்படி ஆகிவிட்டது. கடைசியில் மூன்று நாட்கள் கழித்து மோதிரம் குழந்தையின் கட்டிலின் அடியில் கிடைத்தது. நகைஅணிந்ததால் குழந்தைக்கும் ஸ்கேன் அது இதுவென்று அலைச்சல். நல்ல வேலைக்காரியையும் மனம்புண் படும்படி பேசிவிட்டோம். எனவே பச்சிளம் குழந்தைகளுக்கு நகைகள் அணிவித்து விடுவதைத் தவிர்க்கவும்.''

-எழில்செல்வி.

இன்றைய சூழலில் கணவனை இழந்த (பிரிந்த) பெண்ணோ, அல்லது மனைவியை இழந்த ஆணோ மறுமணம் செய்து கொள்வது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. அவர்கள் குழந்தைகளோடு இருக்கும் பட்சத்தில் தன் புதுத் துணை சம்பந்தமாக குழந்தைகளிடம் மிக நாசூக்காக ஹாண்டில் செய்வதே குழந்தைகள் மனசில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும். துணையிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்போதோ நேரில் சந்திக்கும் போதோ அந்த சூழ்நிலையை ஹாண்டில் செய்ய இதோ சில நாசூக்கான வழிமுறைகள்!

வீட்டில் சாதாரணமாக உங்கள் முன்னாள் துணையுடன் எப்படி நடந்து கொள்வீர்களோ அப்படியே மறுமணம் செய்துகொள்ளப் போகும் துணையுடனும் குழந்தையின் கண்முண்னே நடந்து கொள்ளுங்கள். முன்னாள் துணையுடன் தள்ளி நின்று பழகிய நீங்கள், புதுத் துணையுடன் தொட்டுப் பேசிப் பழகினால் இந்த வித்தியாசம் உங்கள் குழந்தையின் மனதை உறுத்தலாம்.

புதுத்துணையுடனான உங்கள் பர்சனல் நேரம் தவறியும் கூட உங்கள் குழந்தையின் பார்வையில் படாதவாறு கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
குழந்தையின் எதிரே முன்னாள் வாழ்க்கைத் துணையைப் பற்றி, புதுசாக வரப்போகும் துணையிடம் தரக்குறைவாகப் பேசாதீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் முன்னாள் வாழ்க்கைத் துணை முடிந்துபோன கதையாகவோ, கசப்பான நினைவாகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் குழந்தைக்கு அவர்தானே அம்மா(அப்பா)!

நீங்கள் மறுமணம் செய்து கொள்ளப்போகும் நபரை அறிமுகப்படுத்தும் போது, உங்கள் குழந்தை அந்தப் புது நபரை ஏற்றுக் கொள்ள மறுத்து அழுதாலோ, அடம் பிடித்தாலோ கோபப்படாதீர்கள். குழந்தை அவரிடம் பேசித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்துவது குழந்தையின் மனசில் ஒரு விரிசலை ஏற்படுத்தி விடலாம். தவிர, உங்கள் புது துணைக்கும் குழந்தைக்கும் இடையேயான உறவில் ஒரு அழுத்தமான கீறல் விழுந்துவிடலாம்.

மறுமணம் செய்து கொள்வதாக நீங்கள் ஏற்கெனவே தீர்மானித்து விட்டிருந்தால் அதன் பிறகு உங்கள் குழந்தையிடம் நீங்கள் மறுமணம் செய்து கொள்ள பர்மிஷன் கேட்காதீர்கள். உங்கள் விருப்பத்தை குழந்தை மறுத்து நீங்கள் அதை மீறி திருமணம் செய்தால், குழந்தை பாதுகாப்பில்லாத நிலையில் ஃபீல் செய்யலாம்!

தொகுப்பு: ஆ.சாந்தி

வாசகி ஒருவர் நம் குமுதம் சிநேகிதிக்கு உருக்கமாக ஒரு நீண்ட கடிதத்தை எழுதி இருந்தார். அதில் குருவிக்கூடு போல் இருந்த அவரது அழகான குடும்பம் சிதறிப் போனதற்கான காரணத்தை கண்ணீருடன் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தின் சுருக்கம் இதுதான். ``நான், என் கணவர், இரண்டு மகள்கள், எனது நாத்தனார், அவருடைய மகன்கள் என கூட்டுக்குடும்பமாக மிகமிக சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். என் முதல் பெண்ணை என் நாத்தனாரின் மூத்த பையனுக்கே திருமணம் செய்து வைத்தோம்.

என்னுடைய இரண்டாவது மகள் எங்கள் வீட்டின் குட்டி தேவதை. அழகு, அறிவு, குணம் என்று அவளுக்கு எதிலும் குறை வைக்கவில்லை ஆண்டவன். ஆனால் அவள் 17 வயது வரையிலும் பூப்பெய்தவே இல்லை. டாக்டரிடம் காண்பித்ததில், என் மகளுக்கு கருப்பை வளர்ச்சி அடையவில்லை என்று கூறிவிட்டார். இதற்குப் பிறகு நடந்ததுதான் கொடுமையிலும் கொடுமை. இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட என் கணவரின் நண்பரொருவர் (வயது 55), `உங்கள் பெண்ணை இனி யார் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்? பேசாமல் எனக்குப் பண்ணிக் கொடுத்துடுங்களேன்' என்றார். இந்தக் கொடுமையைப் பார்க்க சகிக்காத என் நாத்தனார், அவருடைய இரண்டாவது மகனுக்கு என் மகளை திருமணம் செய்து வைத்து விட்டார். மகளின் திருமணக் கோலத்தைப் பார்த்த சந்தோஷத்தில் என் கணவரும் கண்ணை மூடிவிட்டார்.

என் மருமகன் சும்மா சொல்லக்கூடாது. சாட்சாத் தெய்வக் குழந்தைங்க. என் மகளை, வயதுக்கு வராத குறையைக் கூட பெரிதுபடுத்தாமல் அவள் மீது பாசத்தைப் பொழிந்து வந்தான். இப்படியே 15 வருடங்கள் ஓடிவிட்டன.

தன் மீது இப்படி பாசத்தைப் பொழியும் கணவனுக்கு தன்னால் ஒரு குழந்தையைப் பெற்றுத்தர முடியவில்லையே என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பாள் என் மகள். பாவி மகள் என்ன நினைத்தாளோ ஒரு நாள் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாள். தடுக்கப் போன மருமகனும் தீயில் சிக்கி இறந்துவிட்டார். கருகிப்போன என் தங்கங்களை நினைத்து வாழ்க்கை வெறுத்துப்போனது எனக்கு.

இவ்வளவு காலம் கழித்து இப்போது, என் பெரிய மகள் வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணும் (வயது 28) இதுவரை பூப்பெய்தவில்லை என்று கேள்விப்பட்டேன். உடனே என் சின்ன மகள் ஞாபகம் வந்துவிட்டது! இப்போது என் மனதில் எழுந்திருக்கும் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு பெண் பூப்பெய்தாமல் போவதற்கு என்ன காரணம்?

உருக்கமான இந்த வாசகியின் கேள்வியைச் சுமந்தபடி மகப்பேறு மருத்துவர் சாந்தியைச் சந்தித்தோம். பெண்கள் வயதுக்கு வர தாமதமாவதன் காரணத்தையும், சில பெண்கள் வயதுக்கு வராமலேயே போவதற்கான காரணத்தையும் விரிவாகவே பேசினார் டாக்டர் சாந்தி.

யார் டாக்டரைப் பார்க்க வேண்டும்?

பொதுவாக நம் நாட்டில் பெண்கள் 12 1/2 அல்லது பதின்மூன்று வயதில் பூப்பெய்தி விடுவார்கள். ஆனால் இந்தக் கால குழந்தைகள் அதிக ஊட்டச்சத்து, ஜங்க்ஃபுட் ஆகியவற்றால் 9 வயதில்கூட பூப்பெய்தி விடுகிறார்கள்.

14 வயது வரை பெண்கள் பூப்பெய்தவில்லை என்றால் இதை ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்ள அவசியம் இல்லை. அதிலும் 14 வயதில் அவள் வெளித் தோற்றம் அந்த வயதுக்கு ஏற்ப நார்மலாக இருந்தால் பயப்படத் தேவையில்லை. ஆனால் அந்த வயதில் வெறும் 7, 8 வயதுப் பெண்ணுக்குரிய உடல் வளர்ச்சியுடன் இருந்தால் கட்டாயம் டாக்டரைப் பார்க்க வேண்டும்.

எப்படியாயினும் 17 வயதுக்கு மேலேயும், ஒரு பெண் பூப்பெய்தவில்லை என்றால் சற்று சீரியஸாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 17 வயதில் அந்தப் பெண்ணுடைய வெளித்தோற்றம் நார்மலாக இருந்தாலும் கூட தாமதிக்காமல் உடனே டாக்டரைப் பார்த்துவிடுங்கள்.

பூப்பெய்தாமல் போவதற்கு என்ன காரணம்?

ஒருவேளை பெண்களின் யூட்ரஸ், ஓவரீஸ் போன்ற இனப்பெருக்க உறுப்புகள் சரியான வளர்ச்சி அடையாமல் இருந்தால் பெண்கள் வயசுக்கு வராமல் போகலாம்! அல்லது வஜைனாவில் அடைப்பு இருந்தாலும் இப்படி நேரலாம். பெண்களின் பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருந்தாலும் பூப்பெய்துவதில் பிரச்னை வரும்.

ஓவரியில் கட்டி இருந்தாலும்கூட இந்தப் பிரச்னை வரும். மிக முக்கிய சுரப்பிகளான தைராய்டு, அட்ரினல் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாவிட்டாலும்கூட பெண்கள் பூப்பெய்த முடியாது. குழந்தை உருவாகும் போது, தாயின் உடலில் இருந்து 23X குரோமோசோம்களும், தந்தையின் உடலில் இருந்து 23X குரோமோ சோம்களும் சேர்ந்து ஒரு பெண்ணின் உடலில் 46XO என்ற எண்ணிக்கையில்தான் குரோமோசோம் இருக்க வேண்டும். ஆனால், இந்த குரோமோசோம்கள் ‘45xo (Intter Sex) என்ற எண்ணிக்கையில் குறைந்து இருந்தாலும் கூட ஒரு பெண்ணால் பூப்பெய்த முடியாது!

இதற்கு ட்ரீட்மெண்ட் உள்ளதா?

உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளோடு பெண்கள் வருவது சகஜம்தான். அதனால் பயப்படத் தேவையில்லை. ட்ரீட்மெண்ட் என்று பார்த்தால், ஒருவேளை வஜைனாவில் அடைப்பு இருந்து அதனால் வயதுக்கு வர இயலாமல் போயிருந்தால், அதைச் சரிசெய்ய நவீன மருத்துவத்தில் வழியிருக்கிறது! ஒருவேளை தைராய்டு குறைவாக சுரந்து, அதனால் வயதுக்கு வர முடியாமல் போனாலும் கூட மருத்துவத்தில், சரி செய்ய முடியும்.

யூட்ரஸில் நீர்க் கட்டிகள் இருந்தாலும் ட்ரீட்மெண்ட் உண்டு.

ஆனால் ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு யூட்ரஸ் சரியாக வளர்ச்சி அடையவில்லை என்றால் மட்டும் அந்தப் பெண்ணுக்கு இது குறித்து ட்ரீட்மெண்ட் தருவது கடினம்!

கடிதம் எழுதிய வாசகியின் மகளுக்கும் இந்தப் பிரச்னை இருந்ததால்தான் டாக்டர்களால் அவருக்கு ட்ரீட்மெண்ட் தர முடியவில்லை!

அதே போல, குரோமோசோம் எண்ணிக்கையில் மாறுபாடு இருந்தாலும் கூட மருத்துவத்தில் ட்ரீட்மெண்ட் இல்லை.

வாசகி தன் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அந்த இன்னொரு பெண்ணின் ரிப்போர்ட்டை படித்துப் பார்த்ததில் அந்தப் பெண்ணுக்கு ஓவரியில் நீர்க்கட்டி இருப்பது தெரிகிறது. அதனால்தான் 28 வயதாகியும் இன்னும் அவர் வயதுக்கு வரவில்லை! இதற்கு மருத்துவத்தில் ட்ரீட்மெண்ட் உண்டு. கவலை வேண்டாம்.

- ஆ. சாந்தி

பொதுவாகக் குழந்தைகள் `பூ மாதிரி' என்போம். ``ஆனால் சமீபகாலமாக அந்தப் பூக்களில் முள் முளைத்தது போல முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்களே, ஏன்?'' என்று மனநல மருத்துவர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் விஸ்தாரமாக ஓடி விளையாட இடங்கள் உள்ள வீடுகள் குறைந்துபோய், ஃப்ளாட்ஸ் மயமாகிவிட்டது. அதனால் குழந்தைகளின் ஓடியாடும் திறன் முடக்கப்பட்டு கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என்று மூழ்கிப் போகிறார்கள். ஓடியாடி விளையாடும் போது மன அழுத்தம் வராது. இதெல்லாம் இல்லாமல் மென்கருவி விளையாட்டால் ஒரு இலக்கு மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. போலீஸ், திருடன் கேம்ஸ் என்றால், திருடனை விரட்டிப்பிடிக்க வேண்டும். கராத்தே, குங்-பூ விளையாட்டென்றால், ஒருவர் மற்றவரைத் தாக்கி வெற்றி பெற்றால் மட்டுமே பாய்ண்டுகள் கிடைக்கும்.

இப்படிப்பட்ட கம்ப்யூட்டர் கேம்ஸை விளையாடும்போது, நம் பிள்ளைகளின் விளையாடும் திறன் கட்டுப்படுத்தப்படுகிறது. இப்படி வீட்டின் நான்கு சுவர்க்குள்ளேயே இருக்கும் போது மன அழுத்தம் அதிகமாகி மனசுக்குள் இருக்கும் மற்றொரு ஸ்விட்ச் ஆன் ஆகிறது. அப்போது பிடிவாத குணம் அதிகமாகிறது. நார்மலாகவே குழந்தைகளுக்கு பிடிவாத குணம் இருக்கத்தானே செய்கிறது. இவ்வளவு ஏன்...

பள்ளிக்கூடங்களில் கூட நல்லா படிக்கும் பிள்ளைகளைத் தட்டிக் கொடுக்கும் ஆசிரியர்கள் படிப்பில் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை நல்லா படிக்கும் பிள்ளைகளோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுகிறார்கள். அப்போது குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகி, அது பொறாமையாக வளர்ந்து கடைசியில் மனசுக்குள் இயல்பாகவே வயலன்ஸ் வந்துவிடுகிறது.

ஸ்கூல் விட்டு வீடு வந்தால் டி.வி. டி.வி.டி தான். டி.வி.யை ஆன் செய்தவுடன் சீரியல் எனும் சித்ரவதை ஆரம்பமாகிறது. சித்ரவதையில் சிறுவர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். சீரியலிலும் சினிமாவிலும் ஹீரோவின் குடும்பம் வில்லனை ஏதோ ஒரு காரணத்திற்காக பழிவாங்கும் காட்சிகள் அமைகிறது. இது போன்று தொடர்ச்சியாகப் பார்க்கும் போது, குழந்தைகளிடம் முரட்டுத்தனம் அதிகமாகிறது.

சீரியலும் சினிமாவும்தான் இப்படி என்றால், விளம்பரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. அது ஒரு வாஷிங் பவுடர் விளம்பரம்... ஸ்கூல் விட்டு வரும் ஒரு குழந்தை தவறி கீழே சேற்றில் விழுந்து விடுகிறது. உடனே அக்குழந்தையின் அண்ணன் அந்த சேற்றை அடித்து என் ``தங்கச்சிய அடிப்பியா? அடிப்பியா?'' என்று மிரட்டுவான். பிறகு ``சாரி சொல்லிடுச்சு'' என்பான் அக்குழந்தை அழுகையை நிறுத்தும். நமக்கு ஒருவர் தீங்கு செய்யும் போது தாக்கலாம், என்பதுடன் எதிர்க்கும் குணத்தையும் உருவாக்குகிறதே. வேடிக்கையாக இருந்தாலும், இந்த விஷயம் குழந்தைகளின் மனநிலையை இது எதிர் திசையில் திருப்பி விடும்.

எனவே குழந்தைகளுக்கு எது நல்லது? எது கெட்டது? என்று பெற்றோர்கள் உணர்த்த வேண்டும். எல்லா விஷயத்திலும் வயலண்ட் இருக்கக்கூடாது என்றும், எதிர்க்கும் எண்ணம் கூடாது என்றும் புரிய வைக்க வேண்டும்.

-தி. அனு

ே குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் தலை நிற்கிறதா, 5 மாதத்தில் குப்புத்துக் கொள்கிறதா, 6,7 மாதங்களில் தவழ்கிறதா, 10,12 மாதங்களில் நடக்க ஆரம்பிக்கிறதா என்றெல்லாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ே மேற்சொன்னவைகள் சில நாட்கள் வேண்டுமானால் தள்ளிப் போகலாம், சில மாதங்கள் எல்லாம் தள்ளிப்போனால் உடனே குழந்தை நிபுணரிடம் ஆலோசனை கேளுங்கள்.

ே பிறந்த குழந்தைக்கு முதல் ஒரு வருடம் மிக மிக முக்கியமானது. ஹைஃபீவர், மஞ்சள் காமாலை, ஃபிட்ஸ் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தேவிர்க்க முடியாமல் அப்படி ஹைஃபீவர், மஞ்சள் காமாலை, ஃபிட்ஸ் போன்றவை வந்துவிட்டால், அந்தக் குழந்தைகளை வெகு கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; அதன் வளர்ச்சியில் முழு அக்கறை காட்டுங்கள்.

ே உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்டதா? மென்மையாக பல்துலக்கும் வழக்கத்தை பழக்கப்படுத்துங்கள்.

ே குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, மனவளர்ச்சி இரண்டுமே அவர்கள் வயதிற்கேற்றவாறுதான் இருக்க வேண்டும். தேவையில்லாமல் ஒன்றிரண்டு வயதிலேயே அது, இது என்று சொல்லிக் கொடுத்துத் திணிக்காதீர்கள்.

ே இரண்டு வயதுவரை குழந்தைகள் எதையுமே தொட்டுத் தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்வதாக மட்டுமே இருக்கட்டும். தேவையில்லாமல் எழுத்துப் பயிற்சியெல்லாம் கொடுத்துவிடாதீர்கள்.

ே ப்ளே ஸ்கூலாக இருந்தாலும்கூட சுமார் இரண்டு அல்லது 3 மணி நேரம் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ே உங்கள் குழந்தைக்கு மூன்று வயது ஆகிவிட்டதா? குழந்தைகளிடம் நிறையப் பேசுங்கள். அப்போதுதான் காதுகொடுத்துக் கேட்கும் பழக்கம் குழந்தைக்கு வளரும். அதே போல குழந்தை எந்தப் பொருளைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். சிறிது கால அவகாசத்தில் கொடுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் எதுவுமே சுலபமாகக் கிடைக்கும்'' என்கிற எண்ணம் வராது.

ே குழந்தையிடமிருந்து நீங்கள் என்னென்ன நல்ல குணங்களை எதிர்பார்க்கிறீர்களோ, அந்தக் குணங்களுடன் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த குணநலன்களுக்கு குழந்தைகளுக்கு நீங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள்.

ே டி.வி.யை ஓடவிட்டு குழந்தையை அதற்கு முன் உட்கார வைத்து விடாதீர்கள். ஓடியாடி விளையாடும் குழந்தைகள்தான் பின்னாளில் ஆரோக்கியத்தில் ஜொலிப்பார்கள்.

ே குழந்தைக்கு அடிக்கடி சளி பிடித்தால் கவனம் ப்ளீஸ்... இல்லையென்றால் இந்த சளி காதை பாதித்துவிடும்.

ே வாரம் ஒருமுறை குழந்தையின் நகத்தை வெட்டுங்கள். நகம் இருந்தால் அவர்கள் அதைக் கடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ே 11லிருந்து 14 வயதுவரை குழந்தைகளின் உடலில் அபார வளர்ச்சியிருக்கும் ஆனால் உடல்வளர்ச்சிக்கேற்ற மூளை முதிர்ச்சி (மெச்சூரிட்டி) இருக்காது. அதனால் ``ஆள்தான் வளர்ந்துருக்கியே தவிர...'' என்கிற ரீதியில் குழந்தையை திட்டிப் பேசாதீர்கள்.

ே 11லிருந்து 14 வரை ப்ரீ டீனேஜ் என்று சொல்வார்கள். எனவே அவர்களைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்வதே சிரமமாக இருக்கும். இதில் நீங்கள் வேறு, கண்ணாடி முன்னாடியே நிற்கிறியே... பாத்ரூமில் நுழைந்தால் சீக்கிரம் வரமாட்டேங்கிறியே... ரொம்ப நேரம் ஃபிரெண்ட்ஸ்கிட்ட என்ன பேச்சு?என்கிற குற்றச்சாட்டெல்லாம் வைத்து குழந்தைகளை சங்கடத்துக்குள்ளாகக்காதீர்கள். இந்த வயதில் நீங்கள் எதைச் சொன்னாலும் முரண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ே ப்ரீ டீனேஜில் எதையுமே செய்து பார்க்க வேண்டும், பார்த்ததெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு, ஆவல் குழந்தைகளிடம் இருக்கும். அவர்களின் இந்த ஸ்பீடை கன்ட்ரோல் செய்து, வழிக்குக் கொண்டு வருவது உங்கள் கையில் இருக்கிறது.

ே செல்ஃப் கான்ஃபிடன்ஸ், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்றவற்றில் உங்கள் குழந்தை பெஸ்ட்டாக வளர உதவியாக இருங்கள்.

ே வாசிக்கும் பழக்கம் போன்ற அற்புதமான விஷயம் வேறு எதுவும் இல்லை. மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும் இந்த விஷயம் உங்கள் குழந்தைக்கு மிகவும் தேவை.

ே சில குழந்தைகள் பயந்த சுபாவத்துடனே இருப்பார்கள். அவர்களின் பயத்தைப் போக்கும் மிகப் பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

ே நேர்மை, பொறுமை, பகிர்தல், பரந்த மனப்பான்மை போன்ற பண்புகளை பாப்பாவுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

ே கடைசியாக ஒன்று... உங்கள் குழந்தைக்கு நீங்கள் தரும் சரிவிகித உணவுதான் மேலே சொன்ன எல்லாவற்றையும் சரிப்படுத்த உதவும்!

-எழில்செல்வி,
படங்கள்: எஸ்.சுரேஷ்

புதுசாகப் பிறந்த குட்டிப் பாப்பாவை குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் மாற்றி மாற்றிக் கொஞ்சும்போது, ஏற்கெனவே அந்தக் குடும்பத்தில் உள்ள மூத்த குழந்தை, ஏக்கத்தில் சவலைக் குழந்தையாவதும், குட்டிப்பாப்பாவிடம் கொஞ்சம் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான்! இதை மாற்றி மூத்த குழந்தை, புதுசாகப் பிறந்த பச்சிளம் பாப்பாவிடம் பாசமாக நடந்து கொள்ள வைப்பதெப்படி?

ே முதல் குழந்தையுடன் முதலில் இருந்ததைவிட கூடுதலாகவே நேரம் செலவழியுங்கள்.

ே ``உன் கூட விளையாடத்தான் அம்மா உனக்கு ஒரு புதுப்பாப்பா தரப்போறேன்'' என்று `தனக்காகத்தான் புதுப்பாப்பா வரப்போகிறது' என்று முதல் குழந்தையை நம்ப வையுங்கள்.

ேபிறக்கப் போகும் குழந்தைக்கு பெட் மற்றும் தேவையான பொருட்களை வாங்க வேண்டுமென்றால், 2 மாதத்துக்கு முன்னபாகவே வாங்கி விடுங்கள். அல்லது முதல் குழந்தையே ரொம்பவும் சிறியதாக (2 -3 வயது) இருந்து, அதனுடைய பெட் மற்றும் குழந்தை சாமான்களைத்தான் 2வது குழந்தைக்கும் யூஸ் பண்ணப் போகிறீர்கள் என்றால், குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதம் முன்பாகவே மெல்ல மெல்ல முதல் குழந்தையிடம் இருந்து இந்தப் பொருட்களை அப்புறப்படுத்திவிடுங்கள்! இதனால், தன்னுடைய பொருட்களையெல்லாம் குட்டிப்பாப்பாவுக்கு தந்துவிட்டார்கள் என்று முதல் குழந்தை நினைப்பதைத் தடுக்க முடியும்.

ே ``தம்பி பாப்பாவுக்கு உன் கையால பால் பாட்டில் எடுத்துக் கொடு பார்க்கலாம்'' என்பது போன்று குட்டிப் பாப்பாவுக்கான சிறுசிறு விஷயங்களில் முதல் குழந்தையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

ே உங்கள் கண்காணிப்பில் முதல் குழந்தையின் மடியில் கொஞ்ச நேரம் குட்டிப் பாப்பாவை படுக்க வைப்பதாலும், இரண்டு பொடிசுக்கும் இடையில் ஒரு அட்டாச்மெண்ட்டை ஏற்படுத்த முடியும்.

ஆ.சாந்தி

குழந்தைகள் உலகத்தில் அம்மாவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட அம்மாவிடம் குழந்தைகள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்?

ே என்னதான் தலைபோகிற அவசரம் என்றாலும் குழந்தைகள் பேச்சுக்கு உங்கள் இரண்டு காதையும் கொடுங்கள்.

ே குழந்தைகளின் சின்னச் சின்ன ஆசைகளை முடிந்தவரை நிறைவேற்றப் பாருங்கள்.

ே அவர்களுடைய ஃப்ரெண்ட்ஸை நல்லபடியாக ட்ரீட் செய்யுங்கள்.

ே விளையாட்டாகக் கூட அவர்களின் ஃப்ரெண்ட்ஸ் எதிரே, அவர்களை `இவன் தத்தி' என்கிற ரேஞ்சில் மட்டம் தட்டிப் பேசாதீர்கள்.

ே உங்கள் பிள்ளை படிப்பில் வீக்காகவும், ஸ்போர்ட்ஸ் போன்ற ஏதோவொரு எக்ஸ்ட்ரா ஆக்ட்விட்டீஸில் ஸ்ட்ராங்காகவும் இருந்தால், அந்தத் துறையில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

ே உங்கள் குழந்தை இருட்டுக்கு பயந்தாலும் சரி... கிளாஸ் டீச்சருக்கு பயந்தாலும் சரி... உடனே அவர்களின் பயத்தைத் தெளிய வையுங்கள்.

ே ``நீ தான்டா எனக்கு முக்கியம்'' எனபதை உங்கள் செயல்களின் மூலம் முடிந்த போதெல்லாம் உணர்த்துங்கள்.

ே அம்மாவிடம் எந்த பிரச்னையானாலும் பேசலாம். எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணலாம் என்கிற நம்பிக்கையை எல்லாக் குழந்தைகளும் எதிர்பார்க்கிறார்கள்.

ே நம் அம்மா வேலை செய்யும் ஆபீஸை பார்க்க வேண்டுமென்பது நிறைய குழந்தைகளின் எதிர்பார்ப்பு.

ே குழந்தைகள் ஹோம்வொர்க் செய்யும்போது முடிந்தவரை அவர்களுடன் இருங்கள்.

ே எல்லாக் குழந்தைகளுக்குமே, அவர்களுடைய அம்மாதான் `மிஸ். இண்டியா', `மிஸ்.யூனிவர்ஸ்' எல்லாமே. அதனால் குழந்தைகள் படிக்கும் ஸ்கூலுக்குப் போகும் போது கவனத்துடன் `நீட்'டாக டிரஸ் செய்து கொண்டு போங்கள்.

-ஆ. சாந்தி

குழந்தைகளுக்கான சினிமா மட்டும் அல்ல; குழந்தை களுக்கான எந்த விஷயமுமே இந்தியாவில் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பு கூட குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல தாத்தா பாட்டி என்று வீட்டில் ஆட்கள் இருந்தார்கள். இந்தக் கதைகள் அவர்களின் மன நலனையும், மன ஆரோக்கியத்தையும் வளர்த்தன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை, காலம். அவர்களுக்குக் கிடைக்கும் அபரிமிதமான நேரத்தை என்ன செய்வது? இது குழந்தைகளுக்கும் புரிவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள பெற்றோருக்கும் புரியவில்லை. ஆனால் நம்முடைய தாத்தா பாட்டிகளுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் அப்போது அவர்கள் குழந்தைகளுக்கு ஏராளமான கதைகளைச் சொன்னார்கள்.

இப்போது காலமும் சூழலும் மாறிவிட்டன. தாத்தா பாட்டிகளை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டோம். குழந்தைகளைக் காப்பகங்களுக்கு அனுப்பிவிட்டு தாய் தந்தை இருவருமே அலுவலகம் செல்கிறார்கள்.

தங்கள் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்துக்காக அதாவது, பணம் சம்பாதிப்பதற்காக - அக்குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே நல்ல உயர்தர பள்ளிகளில் `முன்பதிவு' செய்துவிடும் பெற்றோர், அக்குழந்தைகளின் மனநலன் பற்றி அக்கறையே எடுத்துக் கொள்வதில்லை. இத்தகைய பெற்றோர்தான் அதே பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் `கல்யாணம்தான் கட்டிக் கிட்டு ஓடிப் போலாமா, இல்லே ஓடிப் போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?' என்று இலக்கிய நயம் பொருந்திய பாடலைப் பாடி, இடுப்பை `அசைத்து' தங்கள் குழந்தைகள் நடனம் ஆடும் போது கைதட்டி ரசிக்கிறார்கள்.

குழந்தைகள் நல்லபடியாக வளர்க்கப் பட்டால் மட்டுமே குற்றங்கள் இல்லாத சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும். அதற்கு இப்போதைய தமிழ் சினிமா எவ்விதத்திலும் உதவுவதாக இல்லை. வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படங்களைத் தமிழ்நாட்டின் எல்லா விடுகளின் வரவேற்பறையிலும் தாத்தா பாட்டியிலிருந்து பேரன் பேத்தி வரை பார்த்துக் களிக்கிறார்கள்.

சிம்புவும் நயன்தாராவும் ஏன் பிரிந்தார்கள், சிம்புவும் அவருடைய முன்னாள் காதலியும் கடைசியாகப் பிரிந்த போது என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைப் பதிவு செய்யப் பட்ட ஒலி நாடாவில் கேட்காத மாணவ மாணவியை நான் இன்னும் சந்திக்கவில்லை.

இதற்கெல்லாம் அடிப்படையான காரணம், குழந்தைகளுக்கான சினிமாவை நாம் உருவாக்கவில்லை. ஆனால் உலக மொழிகளில் நூற்றுக் கணக்கான எண்ணிக்கையில் குழந்தைகளுக்கான சினிமா உருவாக்கப் பட்டு வருகின்றன. அவற்றில் சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

E.T (அல்லது எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல்): புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய படம். பூமியிலுள்ள தாவரங்கைளப் பற்றி ஆய்வு செய்வதற்காக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த சில உருவங்கள் பூமிக்கு வருகின்றன. அப்போது வேற்றுக் கிரகவாசி ஒன்று அவர்களிடமிருந்து பிரிந்து விடுகிறது.

இந்த வேற்றுக் கிரகவாசியை (ஈ.டி.) எலியட் என்ற சிறுவன் சந்திக்கிறான். நண்பர்களும் விளையாட்டும் இல்லாத அவனுக்கு ஈ.டி. நெருங்கிய நண்பனாகி விடுகிறது. ஈ.டி.யைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து தன் தங்கைக்கும் அறிமுகப் படுத்தி வைக்கிறான். மாடியில் ஏதேதோ வினோதமான சத்தமெல்லாம் கேட்கிறதே என்று விசாரிக்கும் தன் அம்மாவிடமிருந்து ஈ.டி.யை மறைத்து வைக்கிறார்கள் இருவரும்.

ஏதோ ஒரு வேற்றுக் கிரக மொழி பேசும் ஈடிக்கு இருவரும் ஆங்கிலம் சொல்லித் தருகிறார்கள். இதற்கிடையில் ஈடி பற்றித் தெரிந்து கொண்ட அரசாங்கம் ஈடியைக் கைப்பற்ற முயற்சி செய்கிறது. அவர்களிடமிருந்து ஈடியைக் காப்பாற்றத் தன் சகோதரன் மைக்கேலுடன் திட்டமிடுகிறான் எலியட். ஈடியை அழைத்துக் கொண்டு சைக்கிளில் தப்புகிறது சிறுவர் கூட்டம்.

ஈடியை ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டால் ஈடியின் சகாக்கள் விண்வெளிக் கப்பலில் வந்து அதை மீட்டுக் கொண்டு விடுவார்கள். போலீஸ், சிறுவர்களை நெருங்கி விடுகிறது. அப்போது பூலோகத்து மனிதர்களிடம் இல்லாத சக்தியைப் பயன்படுத்தி அப்படியே அந்தச் சிறுவர்களை அந்தரத்தில் பறக்கச் செய்து காட்டுக்குச் சென்று தன் கிரகத்துக்குத் தப்பிவிடுகிறது ஈடி.

ஒரு சிறிதும் அலுப்புத் தட்டாத, படு விறுவிறுப்பான ஈடி வெறும் சாகசக் கதையாக மட்டுமில்லாமல் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற அருமையான செய்தியையும் உள்ளடக்கி இருக்கிறது.

வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட `தி லயன் கிங்' என்ற கார்ட்டூன் படம் உலக அளவில் சிறுவர்களால் ரசிக்கப்பட்டது. இசை மற்றும் பாடல்களுக்காகவும் சிலாகிக்கப்பட்ட இந்த படத்தின் மூலம், ஷேக்ஸ்பியர் எழுதிய ஹேம்லட் நாடகம். இதுவரை வந்த கார்ட்டூன் படங்களிலேயே மிக அதிக வசூலைக் கொடுத்திருக்கும் படம் இது.

தசாவதாரத்தில் நாம் பார்த்த கேயாஸ் தியரி தான் இந்தப் படத்தின் அடிப்படை. இந்த உலகில் படைக்கப்பட்டுள்ள புழு பூச்சியிலிருந்து மான்கள் வரை எல்லாவற்றுக்குமே இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் ஒரு பங்கு இருக்கிறது என்பது தான் கேயாஸ் தியரி. இதில் வரும் சிங்க அரசன் இதைத் தனதுமகனுக்குச் சொல்கிறான். உடனே மகன் கேட்கிறான்.

``ஆனால் தந்தையே, நாம் அந்த மான்களை அடித்துத் தின்று விடுகிறோமே?''

``ஆம்; மான்களை அடித்துத் தின்னும் நாம் வயதாகி இறந்து இந்த மண்ணோடு மண்ணாக மக்கிப் புற்களாக முளைக்கிறோம். அந்தப் புல்தான் மான்களின் உணவாகிறது.''

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மற்றொரு சிறுவர் படம் `அலாவுதீன்.' நமக்கெல்லாம் தெரிந்த `அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற அரபிக் கதை. அக்ரபா என்ற நாட்டில் ஜாஸ்மின் என்ற இளவரசி வாழ்கிறாள். வெறும் பதவிக்காகவும், அந்தஸ்துக்காகவும் வேறோர் அரசனுக்கு மனைவியாக ஆவதை வெறுக்கும் ஜாஸ்மின், உண்மையான அன்பும், காதலும் உள்ளவனையே மணம் செய்து கொள்வதென்று முடிவு செய்கிறாள்.

அரண்மனையிலிருந்து தப்பி வெளியே வரும் ஜாஸ்மின் அலாவுதீனைச் சந்திக்கிறாள். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து விடும் ஜாஃபர் என்ற அமைச்சன் அலாவுதீனைக் கைது செய்கிறான். அரசனைக் கொன்றுவிட்டு ஜாஸ்மினைத் திருமணம் செய்து இதற்கிடையில் அலாவுதீனுக்கு ஒரு அற்புத விளக்கும் கிடைக்கிறது. அதைத் தேய்க்கும் போது ஒரு பூதம் வருகிறது. அவனுடைய மூன்று ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாகக் கூறுகிறது பூதம். அப்படி நிறைவேற்றி வைத்தால் பூதத்துக்கு விடுதலை அளித்து விடுவதாக வாக்களிக்கிறான் அலாவுதீன்.

முதல் ஆசை, தான் ஒரு இளவரசனாகி ஜாஸ்மினை மணக்க வேண்டும். இளவரசனாகி சுல்தானின் அரண்மனைக்கு வரும்போது அவனைச் சிறை செய்து மலை உச்சியிலிருந்து கடலில் தள்ளி விடுகிறான் அமைச்சன். அப்போது அலாவுதீனின் கை ஏதேச்சையாக விளக்கில் பட்டு அவன் முன்னே தோன்றும் பூதம் அவனைக் காப்பாற்றி விடுகிறது.

மூன்றாவது ஆசையையும் பூதம் நிறைவேற்றி வைக்கும்போது அலாவுதீன் தான் வாக்களித்தபடி பூதத்துக்கு விடுதலை அளிக்காமல் ஏமாற்றி விடுகிறான். அப்போது அந்த அற்புத விளக்கை அலாவுதீனிடமிருந்து திருடி விடும் ஜாஃபர் அதன் மூலம் பூதத்தைத் தனது அடிமையாக்கி சுல்தானையும் மற்றவர்களையும் சிறை வைக்கிறான்.

கடைசியில் அலாவுதீன் வென்று சுல்தானாகி, பூதத்துக்கு விடுதலை அளிப்பதாக முடிகிறது கதை.

A Little Princes: ஒரு அற்புதமான படம்: சாரா என்பவள் ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியின் மகள். அவள் பிறக்கும் போதே அவளுடைய அம்மா இறந்துவிடுகிறார். சாரா இந்தியாவில் வளர்கிறாள். முதலாம் உலகப் போர் நடக்கும் கால கட்டம் அது. சாராவின் தந்தை போருக்குச் செல்வதால் சாரா நியூயார்க் நகரில் ஒரு குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள்.

மிகவும் கெடுபிடியான அந்தப் பள்ளிக்கூடமும், ஹாஸ்டலும் சாராவுக்கு ஒரு சிறையைப் போல் இருக்கின்றன. இதற்கிடையில் அவள் தந்தை போரில் இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. குடும்பச் சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தின் வசம் சென்றுவிடுவதால் சாரா இந்தியா திரும்பி ஒரு வேலைக்காரியாக வாழ நேர்கிறது.

ராமனின் கதையும் சீதையின் கதையும் அவளுக்கு மிகப் பெரிய உந்துசக்தியைக் கொடுக்கின்றன. எவ்வளவு பெரிய துன்பம் நேர்ந்தாலும் ஒரு பெண் தனது சுய கௌரவத்தையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் இழக்கக் கூடாது என்று அந்தக் கதையின் மூலம் தெரிந்து கொள்கிறாள் சாரா.

இந்தப் படத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால், எல்லா வசதிகளும் நிறைந்த நியூயார்க் போன்ற ஒரு அமெரிக்க நகரிலுள்ள பள்ளியில் படித்தபோது கிடைக்காத சந்தோஷத்தை சாரா இந்தியாவில் ஒரு வேலைக்காரியாக வாழும்போது அனுபவிக்கிறாள் என்பதுதான்.

ஹாரி பாட்டரை எழுதிய ஜே.கே. ரௌலிங் உலகம் முழுவதும் பிரபலமான சிறுவர் எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் அவரைவிடத் தேர்ந்த ஒரு குழந்தை எழுத்தாளராகக் கருதப்படுபவர் ரொவால்ட் டால் (Roald Dahl). இவரது சிறுவர் படங்களைப் பார்ப்பதே ஒரு தனி அனுபவமாக இருக்கும். இவர் அளவுக்கு விறுவிறுப்பாகக் கதை சொல்பவர்களை என் அனுபவத்தில் நான் கண்டதில்லை. தமிழில் சுஜாதாவைச் சொல்லலாம்.

டாலின் பல குழந்தைக் கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கின்றன. The Witches என்று ஒரு படம். சிறுவன் ல்யூக் விடுமுறையைக் கழிக்க ஊருக்குப் போகிறான். அங்கே சூன்யக்காரிகளைப் பற்றி எச்சரித்து வைக்கிறாள் அவனுடைய பாட்டி. சூன்யகாரிகளுக்குக் குழந்தைகளைப் பிடிக்காது. ஆனாலும் சூன்யக்காரிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். அவர்களுக்குக் கால்கள் தரையில் பாவாது.

ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான் ல்யூக். ஒரு இடத்தில் ஒரு பெரிய அரங்கத்தில் பலரும் கூடிப் பேசுவதைப் பார்க்கிறான். குழந்தைகள் மீதான கொடுமையை நிறுத்தக்கோரும் சங்கத்தினரின் கூட்டம் அது. ஆனால் கடைசியில்தான் தெரிகிறது அவர்கள் அத்தனை பேரும் சூன்யக்காரர்கள் என்று. சாக்லேட்டில் ஏதோ ஒரு பொடியைத் தடவி அதைக் குழந்தைகளிடம் கொடுத்து எல்லாக் குழந்தைகளையும் எலிகளாக மாற்றிவிடுவதுதான் அவர்களின் திட்டம்.

இதைத் தெரிந்துகொண்டு வெளியேறும்போது ல்யூக் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறான். ல்யூக் எலியாக மாறுகிறான். கடைசியில் அவன் எப்படி மீண்டும் சிறுவனாக மாறி, மற்ற சிறுவர்களையும் சூன்யக்காரர்களிடம் இருந்து தப்பிக்கச் செய்கிறான் என்பதே கதை.

டாலின் கதையில் வந்த மற்றொரு சுவாசியமான படம், Willy Wonka and the Chocolate Factory வில்லி வோங்கா என்பவர் ஒரு புகழ்பெற்ற சாக்லேட் நிறுவன அதிபர். அவர் குழந்தைகளுக்காக ஒரு பரிசை அறிவிக்கிறார். ஏதாவது ஐந்து பாக்கெட்டுகளில் ஐந்து தங்க டிக்கெட்டுகள் வைக்கப்படும். அந்த டிக்கெட்டுகளைக் கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு வோங்கா சாக்லேட் தொழிற்சாலை சுற்றிக் காண்பிக்கப்படும். இதுவரை அந்தத் தொழிற்சாலையில் வெளியாட்கள் யாருமே நுழைந்ததில்லை என்பதே அதன் விசேஷம்.

நான்கு டிக்கெட்டுகள் நான்கு பணக்காரச் சிறுவர்களுக்கும், கடைசி டிக்கெட் சார்லி என்ற ஏழைச் சிறுவனுக்கும் கிடைக்கிறது. ஆனால் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உண்டு. உதாரணமாக, அங்கே இருக்கும் சாக்லேட்டுகளை எடுத்துத் தின்னக்கூடாது. இவ்விதிகளை அந்த நான்கு சிறுவர்களும் மீறி விடுகிறார்கள். சார்லி மட்டுமே பொறுமையாக இருக்கிறான்.

``உண்மையான போட்டி என்பது அந்தத் தங்க டிக்கெட்டை வென்றது இல்லை; இப்போது தொழிற்சாலைக்குள் நடந்ததே அது. பொறுமை, நேர்மை, பேராசை கொள்ளாதிருத்தல் போன்ற நற்பண்புகளைக் கொண்ட ஒரு சிறுவனை எனது வாரிசாகத் தேடிக் கொண்டிருந்தேன்; நீதான் அவன்'' என்று கூறும் வோங்கா அந்தத் தொழிற்சாலையையே சார்லிக்குப் பரிசளிக்கிறார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர் படங்களெல்லாம் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பார்த்து இன்புறத்தக்கவை என்பது எனது சொந்த அனுபவம்

இந்த கட்டுரை நான் குமுதம்சிநேகிதியில் படித்தேன்.தோழிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த கட்டுரை கொஞ்சம் பெரிது தான் ஆனால் எல்லோரும் படிக்க வேண்டியது.

very very nice and useful informations
am having a 5 month old baby
this is vry nice
thanks for sharing and sorry for not typing in tamil...my baby is crying

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

ஹாய் பிரதீபாலா, எப்ப்டி இருகிஙக? உண்மையிலேயே உஙகளுக்க்கு ரொம்ப் பொறுமை அதிகமா?இவ்வள்வு அழகா டைப் பண்ணியிருகிஙக.எல்லோருக்கும் ரொம்ம்ப பயனுள்ள்தாக இருக்கிற்து பா. ரொம்பா ரொம்பா நன்றி பா

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

பிரதீபாலா அசத்திடீங்க..எனக்கு படிச்சு முடிக்கவே 1/2 மணி நேரம் ஆச்சுபா..தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமும் என்று என்னைப்போன்ற படிக்க முடியாத ஆனால் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைய தொகுத்து கொடுத்திருக்கீங்க..வாழ்த்துக்கள்..நன்றிகள்..

ஹலோ பிரதிபாலா,
உண்மையில் ரொம்ப யூஸ் புல்லாக இருக்கிறது..
நன்றி,
கவிதா.

kavitha

ஹாய் ஜெயஸ்ரீ நலமா?ரொம்ப சந்தோசம் உங்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.உங்க குழந்தை பெயர் என்ன?

ஹாய் ஜெயா நான் நலமே. நீங்க?எனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம்ப்பா.இது நான் காப்பி பன்னி பேஸ்ட் பன்னியது(அச்சச்சோ உண்மைய சொல்லிட்டனே நீங்க நான் ஏதோ ரொம்ப கஷ்டப்பட்டு டைப் பன்னியதாக நினைத்திருப்பீர்கள்)உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.

ஹாய் சந்தோ நலமா?நீங்க சொன்னதை போல எண்ணி தான் இதை பதிவு செய்தேன்.நீங்க பயன் பெற்றால் எனக்கு மகிழ்ச்சியே.

ஹாய் அருண்கவி நலமா?உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி கொண்டேன்

அன்புடன் பிரதீபா

என் குழந்தையின் பெயர் ஸ்ரீஹிதா...நாங்கள் பாஸ்டனில்,குவின்சியில் வசிக்கின்றோம்...நீங்கள் எங்கு வசிக்கின்றீர்கள்
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ!!!
குயின்ஸியில் எங்க இருக்கீங்க.. எந்த அபார்ட்மென்ட்.. நான் நிப்பான்செட் லேண்டிங் அபார்ட்மென்டில் இருக்கிறேன். நார்த் குயின்சி டிரெயின் ஸ்டேஷன்க்கு பக்கத்தில்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இன்னும் முழுக்க படிக்கலை ஆனால் ஆச்சரியத்தில் பதில் போட வந்து விட்டேன் இதை எத்தனை நேரமா டைப் பன்னினீங்க??உபயோகமா இருக்கும்னு மறக்காம அலுப்பில்லாம டைப் பன்னின பாருங்க..அரும...நன்றி தீப்ஸ்

ப்ரதீபா!!! சூப்பர் போங்க.. நேத்தே போடனும்ன்னு நினச்சேன் முழுதும் படித்ததும் சொல்கிறேன்.. அருமை அருமை...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்