பொழுதுபோக்கு

அறுசுவை செய்திகள்

அறுசுவை செய்திகள்

செய்திகள் வாசிப்பது ரேணுகா ராஜசேகரன்

முக்கிய செய்திகள்:
~~~~~~~~~~~~~~~~~~~

1. அறுசுவையில் அமைதி

2. தளத்தை கலகலப்பாக்க அனைவருக்கும் அழைப்பு

3. மன்றத்தின் போக்கு கடந்த நாட்களில் எப்படி இருந்தது?

விரிவான செய்திகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~
இனி விரிவான செய்திகளை பார்ப்போம் .

1. கடந்த பல மாதங்களாக அறுசுவையில் அமைதி நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

2. புகாரை விசாரித்து அமைதியை கலகலப்பாக மாற்றிட மூத்த உறுப்பினர்கள் முதல் புதிய உறுப்பினர்கள் வரை கேடுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. கடந்த காலங்களில் அறுசுவையில் வெவ்வேறு விதமான தலைப்புகள் , இது மட்டும்தான் என்பது போலில்லாமல் பலவிதமான பேச்சுகள் , சுவாரஸ்யங்கள் , கலாட்டாக்கள் கலந்து அறுசுவையும் கலகலப்பாக இருக்கும் . கொஞ்சம் மன சங்கடத்துடன் வருபவர்கள்கூட கச்சேரியில் சேர்ந்து மகிழ்ச்சியாக திரும்புவர் . ஆனால் சில நாட்களாக ஒரே விதமான கேள்விகள் . ஒரே விஷயங்கள் பற்றிய பல சந்தேகங்கள் இப்படி சுற்றி சுற்றி மன்றத்தின் போக்கு ஒரே பக்கமாக இருக்கிறது . தோழிகள் சேர்ந்து அறுசுவையை மீண்டும் கலகலப்பாக்கி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன. மீண்டும் செய்திகள்காண நம்
"அறுசுவைக்கு வாருங்கள்... :-) "வணக்கம்... :-)

1
Average: 1 (1 vote)

"அறுசுவை செய்திகள்"

செய்திகள் வாசிப்பது ரேணுகா ராஜசேகரன்

முக்கியச் செய்திகள் :
~~~~~~~~~~~~~~~~~~~~
1 . புதுப்பொலிவுடன் நம் அறுசுவை .

2 . புதுவரவுகளின் கவனத்திற்காக பல .

3 . வருகைப்பதிவேடு அவசியம் .

4 . அட்மினுக்கு நன்றிகள் .

5 . பட்டியில் இழுபறி நிலை .

விரிவான செய்திகள் :
~~~~~~~~~~~~~~~~~~~~

1 . நம் அறுசுவை புதுப்பொலிவுடன் வருகைதந்துள்ளது . பல புதிய வசதிகள்
செய்துகொடுக்கப்பட்டுள்ளன . தமிழில் தளம் என்பதால் தமிழில் பதிவிட தட்டச்சு வசதி
உண்டு . ஆங்கிலத்தை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள் .

2 . புதுவரவுகளான தோழிகளுக்கு சிறு வேண்டுகோள் , ஒரே விஷயம் சார்ந்த சந்தேகங்கள்
கேள்விகளுக்கு பல இழைகள் துவங்குவதை தவிர்க்கவும் . உங்களின்
சந்தேகங்களுக்கான பல கருத்துகள் ஏற்கனவே அறுசுவையில் பேசப்பட்டதாகவும்
இருக்கலாம் . மன்றம் என்ற பிரிவில் பல ஆயிரம் இழைகள் உள்ளன . அதில் உங்களின்
சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கிறதா பாருங்கள் . அப்படி இல்லையென்றால் ஒரு பொது
இழையில் உங்களின் கேள்விகளை பதிவிடுங்கள் . பழைய தோழிகள் முதல் இப்போது
உள்ள தோழிகள் வரை யார் படித்தாலும் விடை தெரியுமானால் உங்களின் பதிவிற்கு
கண்டிப்பாக பதில் கிடைக்கும் .

3 . பழைய தோழிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளதால் அறுசுவையில்
வருகைப்பதிவேடு அவசியம் எடுக்கவேண்டும் என்று பல தோழிகள் விரும்புகின்றனர் .
(இனிமேலாவது ஒழுங்கா வாங்கப்பா)

4 . சமையல் , ஆரோக்கியம் , மன்றம் , கைவினை , வலைப்பதிவு , பல்சுவை இப்படி பல
பிரிவுகள் கொடுத்து அதிலும் பல உட்பிரிவுகல் கொடுத்து , ஒவ்வொரு இழையிலும்
எவ்வளவு பதிவுகள் என உடனடியாக காணும் வசதிகள் , தமிழில் தட்டச்சு , இப்படி பல
வசதிகளுடன் தோழிகளை சுதந்திரமாக உலவவிடுவதற்கு அட்மின் அண்ணாவிற்கு
அனைத்து உறுப்பினர் சார்பாக நன்றிகள் பல .

5. வழக்கம்போல பட்டியில் நடுவரை புலம்பவிட்டு ஓடிச்சென்ற இரு அணிகளுக்காகவும் ,
கலந்து கொள்ளாமல் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் பல நல்ல
உள்ளங்களுக்காகவும் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளார் நடுவர் . சங்கோஜங்களை விட்டு
தங்களின் கருத்துகளை பதியுங்கள் . தீர்ப்பு வெள்ளியன்று வெளியாகும் என நமது
மன்றப்பேட்டியின் போது நடுவர் கூறியுள்ளார் .

இத்துடன் இந்த செய்திகள் நிறைவடைகின்றன . மீண்டும் செய்திகள்காண நம்
"அறுசுவைக்கு வாருங்கள்... :-) "
வணக்கம்

5
Average: 5 (1 vote)

பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா இது சீரியல் பற்றி இல்ல. எப்பவோ வந்த பூவே பூச்சூடவா படம் பற்றிதான். சமீபத்தில் டீவியில் இந்த படம் ஒளிபரப்பினாங்க. நம்ம கடைகுட்டி அம்மாக்கு பிடிக்குமேன்னு டீவியில் ரிமைண்டரில் போட்டுவிட்டார். டீவி பார்க்கும்போது சரியாக ரிமைண்டர்க்கு ஏற்றார்போல் மாறி இந்த படம் என்று பார்த்ததும் ஹேப்பி.

எல்லாருமே இந்த படம் பார்த்துதான் இருப்பிங்க. ஏன் இந்த படம் பிடிக்கும் என தெரியவில்லை. எனக்கும் ஒரு வேளை இது போல் அன்னைய விட அன்பான பாட்டி இருப்பதனாலா என்னன்னு தெரியல. படம் பார்க்கும்பொழுது எல்லாருக்குமே அவரவர் பாட்டி நியாபகமும்,குறும்பு பேத்தியின் நியாபகம் வரும்.

அழகான கிராமத்தில் தனியாக இருக்கும் பாட்டி அவரை தேடி வரும் பேத்தி. பேத்தியை நம்பாமல் குழப்பத்தில் ஏற்க முடியாமல் இருப்பார், இனி எப்போதும் பிரிய மாட்டேன் என வாக்கு கொடுக்கும் பேத்தி. குட்டி வாண்டுகள், பக்கத்துவீட்டு ஹீரோ வழியில் சந்திக்கும் சின்ன சின்ன பாத்திரங்கள் இவர்களுடன் முக்கியமான கேரக்டர் அந்த காலிங்பெல்..
அவர்களை சுற்றிய உலகம் அவர்களுக்குள் ஒரு உலகம் என அவர்கள் சுழன்று வரும்போது நாமும்தான் அவர்களுடன் கலந்தே போய்விடுவோம்.

அழகாய் சுற்றி வரும் பாட்டி, பேத்தி இப்படியே இருந்துவிடுவார்களா என ஆசையாய் பார்க்கும்போது அவர்களை பிரிக்க வருகிறது காலம். பேத்திக்கு தலையில் இருக்கும் நோய் ஆபரேஷன் செய்தால் அவள் திரும்பலாம் அல்லது வராமல் போகலாம் என்ற நிலை வரும்போது அந்த பாட்டி எடுக்கும் முடிவும் பேத்தியை அனுப்பி விட்டு அவர் காலிங்பெல் பூட்டும்போது நாமும் அவரை போலவே திரும்ப வருவாள் என நம்பிக்கையுடன் படம் முடியும்
எவ்வளவு முறை பார்த்தாலும் கடைசி காட்சி மனதில் கணத்தை கூட்டும்.
தமிழில் ஜேசுதாசு பாடும் 'பூவே பூச்சூடவா ' என தொடங்கும் பாடல் இன்னும் இதயத்தை கரைக்கும். அங்கு பாட்டி மகளாகவும் பேத்தி அன்னையாகவும் மாறும் காட்சிகள் இன்னும் உணர்வு ஊட்டும்.

மலையாளத்தில் அதே போல் வரும் பாடல் ' ஆயிரம் கண்ணுமாய்' என ஆரம்பம் ஆகும். அந்த பாட்டும் கேளுங்க.

உங்களுக்கு பிடிக்குமா இந்த படம்

5
Average: 5 (2 votes)

பிக் பாஸ் பிக் பாஸ்

பிக் பாஸ்

விடுதலை விடுதலை விடுதலை!!!

அப்ப்ப்ப்ப்ப்பா! )இத விஜய் சேதுபதி வாய்ஸ்ல அழுத்திப் படிங்க) ஒரு வழியா பிக் பாஸ் முடிஞ்சிடிச்சு.

நிஜமாவே சொல்றேன், ரித்விகாவுக்கு 50 லட்சம் கொடுத்த மாதிரி, 106 நாளும் (இந்த ப்ரோக்ராமை திட்டிகிட்டே) பார்த்த நமக்கு ஏதாவது அவார்ட் கொடுத்தாங்கன்னா நல்லா இருக்கும்.

பிக் பாஸ் சீசன் 1 தினமும் பார்க்கவில்லை. கமல் தொகுத்து வழங்குகிறார் என்ற ஆர்வத்தினால், சனி, ஞாயிறில் மட்டும் பார்க்கத் தொடங்கி, அப்புறம் ஓவியா மேட்டர்ல ஒரே ஃபீலிங்க்ஸ் ஆகி, அப்பப்ப பார்த்தோம்.

பிக் பாஸ்

இப்ப பிக் பாஸ் சீசன் 2, தினமும் பார்த்தே ஆகணும் (இத வ.வா.சங்கம் சிவகார்த்திகேயன், சூரி டூயல் வாய்ஸ்ல படிங்க) அப்படின்னு எங்க வீட்டு பிக் பாஸ் உத்தரவு போட்டுட்டாங்க.

மீற முடியுமா? (யாருப்பா அங்க, நம்பிட்டோம்னு லந்தா சிரிக்கறது)

வேற வழியில்லாம, நானும் தொடர்ந்து பார்த்தேன்.

எங்க ரெண்டு பேருக்குமே சீரியல் எல்லாம் பார்க்கற வழக்கமில்ல. இந்த ப்ரோக்ராமில் முக்கிய அட்ராக்‌ஷன், கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதுதான். நிகழ்ச்சியின் ஒரே ஆறுதலும் அவரே.

ஆனா பார்க்க ஆரம்பிச்ச பிறகு, அடிக்ட் ஆகிட்டோம்ங்கறது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு ஏன் தான் இதப் பார்க்கிறோமோ என்று எரிச்சல் பட்டதும் உண்மை.

நான் மனதளவில் உணர்ந்த ஒரு விஷயம், மிகவும் அளவுக்கதிகமான நெகடிவிட்டி வைப்ரேஷன். நிகழ்ச்சி முடிந்ததும், வெறுப்பும் கசப்பும் தோன்றும். தூக்கம் வராது. ஆனாலும் சிலந்தி வலையில் சிக்கின மாதிரி, தினமும் தொடர்ந்து பார்த்தோம் என்பதும் நிஜம்.

அதோட போச்சா, இதப் பற்றி, மக்கள் என்ன பேசிக்கறாங்கன்னு கூகிள் செர்ச் செய்து பார்க்கிற பழக்கம் வேற.

அப்பப்பா! பாலாஜி பேசுவது சரியில்லையென்று சொல்ல வரும் மக்கள் எழுதும் எழுத்தெல்லாம்... என்னவென்று சொல்வது.

இந்த ட்விட்டர், ஃபேஸ் புக் இதிலெல்லாம் இருப்பவங்க கண்டிப்பா ஓரளவுக்கு படிச்சவங்களாகவும், சிந்திப்பவர்களாகவும் இருப்பாங்க என்ற நினைப்பை ஓட ஓட விரட்டி விட்டாங்க.

எத்தனை தரக் குறைவான விமரிசனங்கள், எழுத்துக்கள்! போதுமடா சாமின்னு தோணிச்சு. நல்ல வேளை, நான் ட்விட்டர் அக்கவுண்ட் எல்லாம் ஆரம்பிக்கலை. (இருக்கற ஃபேஸ்புக் பைத்தியத்துக்கே வேப்பிலை அடிச்சு முடியலை)

ரித்விகா வென்றது மிகப் பெரிய ஆறுதல்.

Average: 5 (1 vote)

ஓரம்போ ஓரம்போ பார்ட் 2

இந்த போஸ்ட்க்கு போறதுக்கு முன்னாடி ஒரு பிளாஸ்பேக் இருக்கு..

http://www.arusuvai.com/tamil/node/31853
சொய்...................... அட பிளாஷ்பேக் ஓவர் ப்பா. போய் படிச்சுட்டு வந்தாச்சா. இப்ப இங்க வாங்க

முதன்முதலில் ஒரு வாரம் சைக்கிள் ஓட்ட கத்துகிட்டதும் திரும்ப தொடரவே இல்ல. அப்பறம் ரொம்ப நாள் கழிச்சு என் பையனும், எதிர் வீட்டு பொண்ணும் இந்த வருஷம் புது சைக்கிள் வாங்கினாங்க..
சரி புது சைக்கிள் வரவே முயற்சி செய்தா சுத்தமா ஓட்டவே வரல :( . இருந்தாலும் விடாமுயற்சியா இரண்டு நாள் ஓட்டினேன். அவ்வளவுதான்( அதுக்கு மேல இந்த பசங்க எனக்கு ஓட்ட தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க). சைக்கிள் பஞ்சர் ஆகிடும்ன்னு பொசுக்குந்னு சொல்லிடுச்சுங்களே :'( . முன்பு கத்துகிட்டதும் இப்படி சொல்லிதான் ஓட்டவே விடல.

நேற்று வண்டலூர் உயிரியல் பூங்கா போனோம். காலைலையே தான் கிளம்பிபோனோம் ஆனால் அவ்வளவு கூட்டம். அடிக்கற வெயிலுக்கு நடக்கறத நினைச்சா அப்பவே கண்ணை கட்டிடுச்சு. சரி சைக்கிள் ரெய்டில் போய் சுற்றி பார்த்துடுவோம் அப்படின்னு போய் லைன்ல நின்னா அது அனுமார் வால் போல் அவ்வளவு நீளம்ம்ம்ம்ம்ம். 2 மணிநேரம் காத்திருப்புக்கு பின் சைக்கிள் கைக்கு வந்தது. எப்படியும் நமக்கு சரியா ஓட்ட வரலனா பசங்ககிட்ட கொடுத்துட்டு பொடிநடையா நடைய கட்டிடுவோம்ன்னு நினைச்சேன்.

அப்பறம் தட்டுதடுமாறி யார் மேலேயும் மோதாம எப்படியோ ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்.. வெற்றிகரமாக சைக்கிள் பயணம் முன்றுமணிநேரம் முடிஞ்சவரைக்கும் ஓட்டி சைக்கிளை பத்திரமாக ஒப்படைச்சாச்சு. நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது..

சரி ஸ்கூட்டி ஓட்ட கத்துகிட்டிங்களா கேட்கறீங்களா. ஓட்டுவேன் ஆனா எதிர்க்க யாரும் வரப்படாது ;). யார் என்கூட டபுள்ஸ் வர ரெடியா இருக்கீங்க. :))))

குறிப்பு: மூவில்லாம் பார்ட் 2, 3 நு போறாங்க. நாம ஒரு போஸ்ட்க்கு பார்ட் 2 போடகூடாதான்னு தான் இந்த போஸ்ட். தொடரும் பார்ட் 3 :))

Average: 5 (3 votes)

எனக்கு ஒரு ரோபோ வேணும்....

எனக்கு ஒரு ரோபோ

அறுசுவையில் தான் நிறைய கற்று கொண்டது. உடனே பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. ஆனாலும் புது தளத்தில் எழுத ஆசை. இந்த பதிவு சமீபத்தில் முகநூலில் நான் போட்ட பதிவு தான். மீண்டும் எழுத வேண்டும் என்று நினைத்த பொழுது இதை எழுதினேன்.

கதிரவனோடு போட்டியிட்டு
கடிகாரம் முந்திக் கொள்ள
ஒரு 5 நிமிடம் இன்னும்
ஒரு 5 நிமிடம் என்று
மனம் கெஞ்சி
போர்வைக்குள்
சுருண்டு கொள்ளும்
சோம்பல்...
நேரம் ஆகிவிடும் என்று
மூளை ஆணையிடும்
வரைதான்...
இனி பிள்ளைகள் பள்ளி
செல்லும் வரை ஒவ்வொரு
நிமிடமும் முக்கியம்தான்.!!

குழம்பிலும் காய்
இருக்க வேண்டும்
கொண்டு வரும்
பொரியலும் காயாய்
இருக்க வேண்டும்
என்ற பள்ளியின் கட்டளை
சந்தோஷமாய் இருந்தாலும்
இப்படி தான் இருக்க
வேண்டும் என்பதை விட
இப்படி செய்தால்தான்
குட்டி தொந்தி சந்தோஷப்படும்
என்பதும் முக்கியம்!!

கண்ணைக் கசக்கிக் கொண்டு
பொடியாய் மெல்லியதாய்
நறுக்கவும் துருவவும்
மதிய உணவும் , காலை
உணவும் ஒன்றாய்
வெந்து வதங்கும் நேரம் சமையலறைக்கும் படுக்கையறைக்கும்
இடையே சில ஓட்டங்கள்...

ஒளிந்து கொண்ட
நோட்டுப் புத்தகமும் ,
மறந்துபோன துண்டும்
ஒன்றாய் அழைக்கும்போதே
குக்கரின் விசிலும்
திருப்பி போட்ட
தோசையும் அழைக்கும்...

காலை உணவில் இருந்து
காலணி அணியும் வரை
வரும் குட்டி குட்டி
சண்டைகளுக்கு
பஞ்சாயத்து தலைவர்
ஹிட்லராய் மாறும்
தருணங்களில்
பதற்றங்களுக்கு
பஞ்சமில்லை........

வீட்டில் ஆங்காங்கே
சிதறிக் கிடக்கும்
புத்தகங்கள், செய்தித்தாள்கள்,
விளையாட்டு சாமான்கள்,
காற்றோடு பறந்து வந்து
படிந்து போன தூசிகள் ,
வாடகையே கொடுக்காமல்
தன் வீட்டை கட்டி
என் வீட்டை குப்பையாக்கும்
சிலந்தி வலைகள்,
சிதறிக்கிடக்கும் அடுப்பு மேடை சேர்ந்து கிடக்கும் பாத்திரங்கள்
குவிந்து கிடக்கும் துணிகளை பார்க்கையில் மனம்
மலைத்து போக
மறுப்பதில்லை!!!

திடீரென்று கொதித்துக் கொண்டிருக்கும்
தேனீருக்கு தெரியாது
அவசரமாய் விட்டு வந்த
காகிதங்கள்
காற்றோடு சண்டையிடுவது...

அழைப்பு மணியிலும்
தொலைபேசி ஒலியிலும்
கதை பேசும் வேளையில்
உயிர் பெற காத்திருக்கும்
காகித ரோஜாக்களை
பார்க்கும்போது கொஞ்சம்
பாவமாய் தான் இருக்கிறது....

மதிய உணவின்
மயக்கம் தீரும் முன்னே இரவு உணவிற்கு ஆலோசனை நடத்தும் மனதை என்னதான் செய்ய...

வீட்டுக்குள் நுழையும்போதே முட்டிக்கொள்ளும் முரண்பாடுகள்
மண்டியிட்டு மல்யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் மந்திர பூனைகள் என் வீட்டு குட்டித் தலைவர்கள்.....

பொங்கி விடுமோ என்று கண் இமைக்க மறந்த கணத்தில்
எட்டி எடுப்பதாய் முட்டிக்கொண்டு நிற்கும் வண்டுகளின் அலறல் சத்தத்தில் திரும்பிய கணமதில் பொங்கியே விட்டது....
பாலும் கோபமும்......
சிந்திய பாலையும்
கடித்து சிதறிய
கடலை மிட்டாயையும்
அவசரமாய் துடைக்க வேண்டும்
அலையா விருந்தாளிகள் வரிசையில் வருவதற்குள்....

தீர்ந்துபோன தேநீர்
குவளையோடு
மதிய உணவை
சுமப்பவன் வந்ததும்
சுவாசிக்கவும் மறுக்கிறது
மனம்...

தெரியாத வார்த்தைக்கு
அர்த்தம் தேடுவதற்குள்
தொலைந்து போகிறது
எழுதுகோல்....
தடுமாறிப் போன
எழுத்துக்களை
தூக்கி நிறுத்தி...
படிப்பதாய் படம் பார்த்து
வாசிக்க மறுக்கும் நேரம் பொறுமைக்கும் பொறுமை தேவைப்படுகிறது!!

இரவு உணவை இம்சை
அரசர்கள் முடித்தாலும்
தூக்கம் தானாய் தூது
செல்வதே இல்லை!!

இடறிய பொருளையெல்லாம்
இடம் பார்த்து வைக்கும் தருணம்
ஏக்கமாய் பார்த்த காகித ரோஜா
கண் முன் தோன்றிட
குட்டிக்குட்டி காளானாய்
முளைத்து கொண்டிருக்கும்
வேலைக்கும்
காலை எழுந்ததும்
சமைக்கப்படும் உணவு பட்டியலுக்குமே
முன்னுரிமை கிடைக்கிறது!!!

திடீர் விருந்துக்கு
அவசர உதவிகள்
பிரியமானவர்கள்
செய்தாலும்

மலைத்து நிற்கும் பொழுதில்
பொறுமையை மறக்கும் வேளையில்
பதற்றத்தால் பக்குவம் இழக்கையில்
ஓய்வின்றி ஓய்ந்து போகையில்
சோர்வாய், சோம்பலாய் இருக்கின்ற தருனத்தில் மனம் சப்தமின்றி சொல்கிறது....
நான் சொல்ல கேட்டு
என் வேலையெல்லாம் செய்து
முடிக்க எனக்கு ஒரு ரோபோ கிடைத்தால் நல்லா இருக்குமே!!!!

"I wish, I had a robot
that could do all my work"

என்ற வரி மட்டும் நிஜமானால்
என் வேலையெல்லாம் வேகமாய் முடியுமல்லவா!!

Average: 5 (2 votes)

ஸரிகமபதனிஸ‌ ////// 2

சரோ அம்மா

''கூலி மிகக் கேட்பார். கொடுத்தது எல்லாம் தாம் மறப்பார்.'' என்று மகா கவி பாரதியார் வேலை செய்யும் உதவியாளர்களைப் பற்றி சொல்வார். ஆனால் என் வீட்டில் பணி புரிந்த‌ சரோ அம்மா மிகவும் நல்லவர். என் வசதியை கவனம் பார்ப்பார்கள், அவர்கள் வசதியை பார்க்கமாட்டார்கள். எந்த‌ வேலையையும் சுறுசுறுப்பாக‌ செய்வார்.

நாங்கள் காலை நேரத்தில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் ''நீ சாப்பட்டாயா? நான் சாப்பிட்டேனா? லன்ச் பாக்ஸ் எடுத்தோமா? வீட்டை பூட்டினோமா, யார் சாவி எடுத்து செல்வது? '' என்று ஒரு குருஷேத்திர போர்க்களமாக‌ இருக்கும். ஆனால் சரோம்மா கூலாக‌ ''அம்மா நீங்க‌ வேலைக்குப் போங்க‌ நா நிதானமா வந்து என் வேலையை செய்கிறேன்''நு சொல்லிட்டு மாடிப்படியில் உட்கார்ந்துவிடுவார். நமக்கு இடைஞ்சல் தராமல், நமக்கு ஏற்ப வீட்டுவேலை உதவியாள் கிடைப்பதுக் கூட‌ ஒரு வரம் ஆகும். அந்த‌ வரம் சரோம்மா வடிவில் கிடைத்தது.

அவர்களுக்கு தேவை நொய் கஞ்சி, வெற்றிலை, பாக்கு. அவ்வளவுத் தான். கஞ்சியைக் குடித்துவிட்டு பொறுமையா வெத்திலைப் போட்ட சுகத்துடன் எல்லா வேலைகளையும் சுத்தமா செய்வார். அதுவும் இல்லாம‌ தான் ஒழுங்கா, சுத்தமா எல்லா வேலையும் செய்தோமானு தன் வேலையை தானே மேற்பார்வை செய்வார். அவர்களது இந்த‌ குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ''எனக்கு சேலை வேண்டாம், யாராவது பழைய‌ சேலை கொடுப்பார்கள் அதுவே எனக்குப் போதும், எங்கள் வீட்டில் மண்சட்டிதா இருக்கு, ஸ்டீல் சாமான் இல்ல‌. நீங்க‌ தட்டு, கிண்ணம், குடம் நு கொடுத்தா நல்லா இருக்கும், அதுக்கூட‌ நா எனக்குனு கேட்கல்ல‌. என் மகனுக்கு பேத்திய‌ கட்டிக்கப் போற‌
அவர்களும் இல்லாத‌ பட்டவங்க‌, அவங்க‌ கொடுப்பதுடன் நாமும் கொஞ்சம் சேர்த்துவைப்போமே. நாந்தா மண்செட்டியாட‌ வாழ்ந்துட்டேன், என் பிள்ளை, மறுமகள் சாமான் செட்டோட‌ வாழறத‌ பார்க்கனும்னு ஆசை தாம்மா'' நு வெள்ளந்தியா சொல்லும். அதற்காகவே நாங்க‌ எந்த‌ ஊருக்கு டூர் போனாலும் சரோம்மாவுக்கு ஆசைப் பட்ட‌ பாத்திரத்தை முதலில் வாங்கி விடுவேன். அப்புறம் தான் எனக்கு.

ஆனால் ஆசைஆசையாய் பொருட்களை சேர்த்த‌ அந்த‌ தாய், அந்த‌ மகன் வாழ்ந்த‌ வாழ்க்கையை பார்க்க‌ கொடுத்து வைக்கவில்லை. அவள் ரசித்து தின்ன‌ வெத்திலையே அவளுக்கு எமனாக‌ வந்துவிட்டது. எங்கள் பூஜைக்கு பயன்படுத்திய‌ வெத்திலய‌ கொடுப்பதுடன், யார் வீட்டில் தாம்பூலம் கொடுத்தாலும் கேட்டு வாங்கி வந்து சரோம்மாவுக்கு கொடுப்பதில் அவ்வளவு சந்தோஷம். அதிகமான‌ வெத்தில்ல‌ பழக்கத்தினால் அவளுக்கு வாயில் புற்று நோய் வ்ந்துவிட்டது, பாவம் மிகமிகப் கேவலப்பட்டு இறந்து விட்டாள்.

அவளது மகனும் குடிப்பழக்கத்தால் இறந்துவிட்டான். மறுமகள் தாய் வீட்டிற்கே சென்று விட்டாள். குடும்பமே சிதைந்துவிட்டது. சரோம்மா இறந்து பத்து வருடம் ஆகிவிட்டது. அவளது இறப்பிற்கு பண‌ உதவி செய்ததுடன், பதினாறாம் நாளுக்கும் படையலுக்கு தேவையான‌ பொருட்களை கொடுத்து அந்திம‌ காரியங்களை செய்யச் சொன்னோம்.

இன்று வரை அவள் பேரன் படிப்பதற்கு உதவி, பண்டிகை காலங்களில் உடை, செலவுக்கு பணம் கொடுத்து வருகிறோம். அவள் போல் வேலையாள் கிடைப்பது கடினம். ஒவ்வொரு நாளும் காக்கைக்கு சாதம் வைத்து அவள் பெயரையும் சேர்த்தே சொல்வேன் இதுதான் நான் அவளுக்கும் செய்யும் நன்றிக் கடன். இந்த‌ சரோம்மா தான் எனது இரண்டாவது தோழி ரி, ரி, ரி.

5
Average: 4.2 (6 votes)

அஜித்குமாரின் அன்பு மனம்

என் கணவர் திரு சுப்ரமணியம் அவர்கள் டி.வி.சீரியல்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களிலும் தோன்றுவதுண்டு.

ஷுட்டிங் முடிந்து வந்ததும், ஷூட்டிங் நடந்த இடம், இடம் பெற்ற நடிகர்கள் என்று சுவாரசியமாக சொல்லுவார்.

எந்திரன் படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு வந்த போது எங்களுக்கு ஒரே பிரமிப்பு.

ஷூட்டிங் முடிந்து வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி - ‘ரஜினிகாந்த் வந்திருந்தாரா? ஐஸ்வர்யா ராயை பார்த்தீங்களா?’ என்பதுதான்.:):)

பின்னே? அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பத்திரிக்கையாளர்களுக்கே அனுமதி கிடையாது என்று பரபரப்பான நியூஸ் அடிபட்டுக் கொண்டிருந்த போது, ரஜினியையும் ஐஸ்வர்யா ராயையும் நேரில் பார்க்க முடிந்தது பெரிய விஷயமாயிற்றே.

இங்கே நான் பதிவிடப் போவது தல அஜித் குமாருடன் என் கணவர் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது கிடைத்த இனிய அனுபவத்தைப் பற்றி.

சென்ற பதிவைப் போல இதையும் என் கணவரின் வார்த்தைகளிலேயே பதிவிடுகிறேன்.

இனி, ஓவர் டு திரு சுப்ரமணியம்:

சென்ற வருடத்தில் ஒரு நாள் – அஜித்குமாருடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது.

படப்பிடிப்பு இடைவேளையின் போது – சக நடிகர்கள் சிலர் ஒரு இடத்தில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தோம்.

லேசாக மழை ஆரம்பித்ததால் – அஜித்குமார் உள்ளே வந்தார். நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை அவர் கடந்த போது, மரியாதை நிமித்தம் நான் எழுந்து நின்றேன்.

அவர் உட்கார நினைத்தால் இடம் வேண்டுமே.

அஜித்குமார் என்ன செய்தார் தெரியுமா – என் தோளைப் பிடித்து அழுத்தி என்னை உட்கார வைத்தார்.

அது மட்டுமல்ல – “அங்கிள், நான் வர்றதுக்காக எல்லாம் நீங்க எழுந்திருக்ககூடாது, உட்காருங்க அங்கிள்`’ `என்று அன்புடன் கூறினார்.

அவர் அத்தனை அன்பாக சில வார்த்தைகள் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு ஃபோன் வந்தது.

அஜித்குமார் உங்களை ஃபோட்டோ எடுத்திருக்கிறார். இந்த நம்பரை காண்டாக்ட் செய்து, உங்கள் ஃபோட்டோவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் ஒரு நண்பர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அஜித் குமார் என்னை ஃபோட்டோ எடுத்தாரா, எப்பொழுது என்று திகைத்தேன்.

குறிப்பிட்ட நண்பரை தொடர்பு கொண்டேன்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த என்னை, எங்கோ தொலைவில் இருந்து, மிக அருமையாக ஃபோகஸ் செய்து, புகைப்படம் எடுத்திருந்தார் அஜித்குமார்.

அது மட்டுமா!

அந்தப் புகைப்படத்தை பெரிய அளவில் ப்ரிண்ட் செய்து, அதில் அவரது ஆட்டோக்ராப் இட்டிருந்தார்.

அழகான முறையில் அதை ஃப்ரேமும் செய்து, அனுப்பியிருந்தார்.

என்னுடைய மகிழ்ச்சியையும் திகைப்பையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
புகைப்படத்தை என்னிடம் கொடுத்த நண்பர் என்ன சொன்னார் தெரியுமா?

“சார், இந்த ஃபோட்டோ உங்ககிட்ட கொடுத்தாச்சுன்னு அஜித்குமாருக்கு தகவல் சொல்லணும். நீங்க இதை கையில் வைத்துக் கொள்ளுங்க, ஒரு ஃபோட்டோ எடுக்கிறேன்.

அதோடு, நீங்க அஜித்குமாரிடம் ஏதாவது சொல்லணும் என்றால் அதையும் ஒரு வீடியோவாக எடுத்துக்கறேன்” என்றார்.

மகிழ்ச்சியில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ரொம்ப நன்றி அஜித் சார், சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களிடம் பேசி, என் நன்றியை சொல்ல ஆசைப்படறேன்” என்று ஆர்வத்துடன் சொன்னேன் அந்த வீடியோவில்.

அடுத்த வாரத்தில் மற்றொரு படப்பிடிப்பில் நண்பர் என்னை சந்தித்தார்.

”அஜித்குமாரிடம் பேசணும்னு சொன்னீங்களாமே, இப்பப் பேசறீங்களா?” என்று கேட்டு, அஜித்குமாரின் செயலாளரின் ஃபோனில் தொடர்பு கொண்டு, என்னிடம் கொடுத்தார்.

“என்ன சுப்ரமணியம் சார், ஃபோட்டோ கிடைச்சுதா” என்று அஜித்குமாரின் காந்தக் குரல் கேட்டது.

‘கிடைச்சுது சார், ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்கு ஒரு ஆசை, உங்களுடன் இன்னும் நிறைய படங்களில் சேர்ந்து நடிக்கணும்” என்று கோரிக்கை வைத்தேன்.

“அதுக்கென்ன, கண்டிப்பா நான் உங்க கூட நிறைய படங்களில் நடிக்கிறேன்” என்றார் அன்புடன்.

எத்தனை எளிமையும் அடக்கமும் பாருங்கள்!!!

உங்க கூட நான் நடிக்கணும் என்று நான் சொல்ல, அதுக்கென்ன நடிக்கலாம் என்று சொல்லாமல், ‘நான் உங்க கூட நடிக்கிறேன்’ என்று வார்த்தைகளிலும் அவரது எளிமையான பண்பை வெளிப்படுத்திய பண்பாடு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மக்களின் மனம் கவர்ந்த அஜித் குமாருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

5
Average: 5 (12 votes)

தளபதி விஜய் அவர்களுடன் – தங்கமான தருணங்கள்!

வணக்கம், வணக்கம்!

ரொம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் எழுதலாம் என்று உட்கார்ந்தால், எழுதவே ஓட மாட்டேனெங்கிறது. சோம்பேறித்தனமாக இருந்து பழகி விட்டது போல!

அதுக்காக எழுதாம இருக்க முடியுமோ?

ஏற்கனவே ஒரு பதிவில் என் கணவர் ‘கத்தி’ படத்திலும் மற்ற படங்களிலும் நடித்ததைப் பற்றி, பதிவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

ஃபேஸ்புக்கில் என் கணவர் போஸ்ட் செய்திருந்ததை, அவர் வார்த்தைகளிலேயே இங்கே பதிவிடுகிறேன்.

(அருள் பாஷையில் சொன்னால் ‘செல்ஃப் டப்பா :):))

இனி - ஓவர் டு திரு சுப்ரமணியம் (எல்லாம் டி.வி. மேட்ச் பார்த்த பாதிப்பு)

மதுரையில் வேலை பார்த்து, ரிடையர் ஆன பிறகு, சென்னைக்கு வந்து - திரைப்படங்களிலும், சீரியல்களிலும், விளம்பரப்படங்களிலும் நடித்தது, மிகவும் அருமையான வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது.

‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய்யுடன், முருகதாஸ் டைரக்‌ஷனில் நடித்தது மறக்கவே முடியாத ஒன்று.

ஆகஸ்ட் 18, 2013 அன்று, டைரக்டர் முருகதாஸ் அவர்களே நேரடியாக செலக்ட் செய்தார். என்னுடன் என்னைப் போல சீனியர் சிட்டிஸன்கள்(!) பலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அஸிஸ்டெண்ட் டைரக்டர் எங்களிடம் வந்து, நாங்கள் தாடி வளர்க்கத் தொடங்க வேண்டும் என்றும், அந்த கெட் அப் படம் முடியும் வரையிலும் இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

தளபதி விஜய்யுடன் படம் முழுவதும் வரும் வாய்ப்பு என்று தெரிந்தபோது – பிரமிப்பாகவும், எக்ஸைடட் ஆகவும் இருந்தது.

விஜய் மிகவும் ரிசர்வ்ட் என்று சொல்வார்களே, படப்பிடிப்பில் அவருடன் பேச முடியுமா என்று ஆவலாக இருந்தது.

ஆனால், விஜய் படப்பிடிப்பில் எல்லோருடனும் அன்புடனும் சகஜமாகவும் பழகி, எங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

எங்கள் சக நடிகர் ஒருவருக்கு பிறந்த நாள் வந்த போது, கேக் வெட்டி, எங்களுடன் அவரது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

புஷ்பா கார்டன்ஸ், வளசரவாக்கத்தில் முதியோர் இல்லம் செட் போடப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது.

ஒரு நாள் படப்படிப்பின்போது, சகஜமாக என் அருகில் அமர்ந்து, என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, விசாரித்து, கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல், உரையாடியது மறக்கவே முடியாது.

படத்தில் விஜய், முதியோர் இல்லத்தில் எங்கள் அனைவரிடமும், மீடியாவின் கவனத்தை திருப்புவது பற்றி பேசுவது போல ஒரு காட்சியை பார்த்திருப்பீர்கள்.
மிக நீண்ட வசனம் – ஏற்ற இறக்கங்களுடன் – உணர்ச்சி ததும்ப அவர் பேசியபோது, எல்லோரும் பிரமித்துப் போனோம்.

காட்சி படமாகி முடிந்து, அவர் கிளம்பத் தயாரான போது, அவர் அருகில் சென்று – ’சார், ஒரு நிமிஷம் உங்களோட பேசணும்’ என்றேன்.

‘சொல்லுங்க’, என்றார் சகஜமாகவும் அன்புடனும்.

‘ரொம்ப அருமையாக, பிரமாதமாகப் பேசினீங்க சார், இந்த சீன் ரசிகர்ளிடமும் பொதுமக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும்’, இந்த சீன் நிச்சயமாக மிகப் பெரிய அளவில் பேசப்படும் சார்’, என்று என்னுடைய பாராட்டுக்களை மனப்பூர்வமாக தெரிவித்தேன்.

‘உங்களுக்குப் பிடிச்சிருந்ததா சுப்ரமணியம் சார், ரொம்ப தாங்க்ஸ்’ என்று மலர்ந்த முகத்துடன் அவர் நன்றி சொன்ன போது, சந்தோஷமாக இருந்தது.

அவருடன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த என்னுடைய பாராட்டுக்களை, முக்கியத்துவம் கொடுத்து, நன்றி சொன்னது, அவர் மேல் இருக்கும் அன்பையும் மரியாதையையும் இன்னும் அதிகரித்தது.

அவரது பிறந்த நாளுக்கு சில நாட்களுக்கு முன்னால் –

யூனிட்டில் ‘விஜய் எல்லோருக்கும் பிரியாணி விருந்து கொடுக்கப் போறாராம்’ என்று பேசிக் கொண்டார்கள்.

யூனிட் மட்டும்தான் – இல்ல இல்ல – கூட நடிக்கிற நம்ம எல்லோருக்கும்தான், என்று ஒரு ஊகம்.

எல்லோரையும் குடும்பத்துடன் வரச் சொல்லப் போறாங்களாம் என்று ஒரு தகவல்.

அது எப்படி முடியும், கல்யாண வீடு மாதிரி இருக்குமே என்று ஒரு பேச்சு.
யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு – படப்பிடிப்புக்குக் காலையில் வந்தவுடன், யூனிட்டிலிருந்த எல்லோருக்கும் தகவல் சொல்லப்பட்டது.

இன்று மதியம் விஜய் எல்லோருக்கும் விருந்து வழங்குகிறார். எல்லோரும் குடும்பத்துடன் வரும்படி அழைத்திருக்கிறார்!!!

அனேகமாக எல்லோருமே தயாராகத்தான் இருந்தார்கள். அவரவர் வீட்டுக்கு ஃபோன் கால்கள் பறந்தன.

பின்னே???!!!! தளபதி விஜய் தரும் விருந்தில் கலந்து கொள்வது என்றால் சாதாரண விஷயமா?

நான் என் மனைவியிடம் ஃபோனில் தகவல் சொல்லி விட்டு, வீட்டுக்குப் போய் அழைத்துக் கொண்டு வந்தேன்.

என் மனைவியிடம் பல கேள்விகள் இருந்தன –

விஜய்யைப் பார்க்க முடியுமா? ஷூட்டிங் பாக்கலாமா? விஜய் பேசுவாரா? ஃபோட்டோ எடுக்க அலவ் பண்ணுவாங்களா என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தார்.

எதற்கும் இருக்கட்டும் என்று காமிராவையும் கொண்டு வந்தார்.

மதிய விருந்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

சைவம், அசைவம் என்று தனித் தனியான பந்திகள்.

எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் விதமாக, நடிகர் விஜய் அவர்களே, எஙகள் அனைவருக்கும் பிரியாணி பரிமாறி, விருந்து அளித்தார்.
ஆம், கிட்டத்தட்ட 400 பேருக்கும் மேல் வந்திருந்தோம்.
அத்தனை பேருக்கும் பொறுமையாகவும் சிரித்த முகத்துடனும், அவரே பரிமாறினார்.

எல்லோருக்கும் பரிமாறி முடித்து, எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகுதான் அவர் சாப்பிட்டார்.

இது மட்டுமா?!

முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களாக நடித்த எங்கள் அனைவருக்கும் அன்று உடைகள் பரிசளித்தார்.

அத்துடன் ஒவ்வொருவருடைய குடும்பத்தினருடனும், தனித்தனியாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்.

அனைவரிடமும் அன்புடன் உரையாடினார்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் - கத்தி படத்தில் அவருடன் நடித்தது மறக்க முடியாத ஒன்று.

படப்பிடிப்பு நிறைவடைந்து, சில வாரங்களுக்குப் பிறகு – மீண்டும் ஒரு தகவல் –
டைரக்டர் முருகதாஸ், நடிகர் விஜய் இருவரும் எங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்க அழைத்திருக்கிறார்கள்.

இங்கே நாங்கள் என்று நான் குறிப்பிடுவது – படத்தில் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களாக நடித்தவர்கள் – கிட்டத்தட்ட 40 பேர் – எல்லோருமே அறுபது வயதைக் கடந்தவர்கள்.

எங்கள் அனைவரிடமும் டைரக்டர் முருகதாஸ் சகஜமாக, சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்.

ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்த போது – எங்கள் அனைவரிடமும் படம் முடிந்த பிறகு ஒரு நாள் சந்தித்துப் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

விஜய் அவர்கள் ஏற்கனவே விருந்து கொடுத்து விட்டாரே, இப்போது மீண்டும் சந்திப்புக்கு அழைத்திருக்கிறாரே என்று ஒரு ஆச்சரியம்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் மாலை நேரத்தில் எல்லோரும் கூடினோம்.

விஜய் எங்கள் எல்லோருக்கும் விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்து, ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும், திக்கு முக்காட செய்தார். அத்துடன் படப் பாடல்கள் அடங்கிய சி.டி. ஒன்றும் வழங்கப்பட்டது.

விஜய், முருகதாஸ் இருவருடன், புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

என் கைகளைக் குலுக்கி, தோள் மீது கை போட்டு, அன்புடன் என்னை அணைத்துக் கொண்டார் விஜய்.

மறக்க முடியுமா – அந்தத் தங்கத் தருணங்களை!!!

5
Average: 5 (8 votes)

வலைப்பூவில் பூத்தப் பூ

'''அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ''' என்பது பழமொழி. ''அகத்தின் கருத்து முக‌ நூலில் தெரியும்'''என்பது புது மொழி. இன்றைய‌ நவீன‌ அறிவியல் முன்னேற்ற‌ உலகில் முக‌ நூலும் ஒரு நூலாக‌ உள்ளது. இதில் உறுப்பினராக‌ இருப்பது பெருமையும், புகழுமாக‌ மாறிவிட்டது. இதுவும் அறிவியல் அறிவு வளர்ச்சியின் பரிணாமமே.

முக‌ நூலில் வரும் கருத்துக்களும், கணிப்புக்களும், எண்ணங்களின் வடிவங்களும் சுவாரஸசியமானது. ரசனைக்குரியது. நல்ல‌ சிந்தனைக்கும் உரியது. இதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எனக்கும் வலைப் பூவில் வரும் பூக்கள் அது தாங்க‌ அவர்களது கருத்துக்கள் மிகவும் பிடிக்கும். நான் படித்த‌, ரசித்த‌, சிரித்த‌, சிந்தித்த‌ வலைப்பூ கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். நீங்களும் படியுங்கள், ரசியுங்கள், சிரியுங்கள், சிந்தியுங்கள்.

1. இன்று நாம் தலை குனிந்து படிப்பது எல்லாம், நாளை நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே.

2. தாயின் மடியில் உள்ள‌ மடிகணினியை பார்த்தது குழந்தை ஏக்கத்துடன்.

3. புணல் ஓடிய‌ ஆறில், இன்று மணல் லோடு வாகனங்கள் ஓடுகிறது.

4. அன்பின் கருவூலமாக‌, ஆதரவின் குருகுலமாக‌ இருப்பவள் தாய் மட்டுமே.

5. மேக்ஸ் நோட்லே பேணாவில் ஹோம் வொர்க் பண்றவந்தான் உலகத்திலேயே தைரியசாலி.

6. ஷாஜகான் காலத்தில் எதிர் கட்சி இல்லை, இருந்திருந்தால் அவருக்குப் பிறகு தாஜ்மகால் மருத்துவமனையா மாறியிருக்கும்.

7. உலக‌ கோப்பையை இந்தியா பறிகொடுத்து இருந்தாலும், ''மக்களின் சாம்பியன் இந்தியா''என்று செய்தியில் வாசிக்கப்படும்.

8. விவசாயம் செய்பவனை கேவலமாகவும், கணினியில் வேலை செய்பவனை கவுரமாகவும் நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை ''அரிசியை டவுன்லோட் செய்ய‌ முடியாது'' என்று.

9. அந்தந்த‌ சீசனில் கிடைக்கும் பொருளை வருஷம் பூரா கிடைக்கிற‌ மாதிரி எப்ப‌ மனுஷன் மாத்த ஆரம்பிச்சானோ, அப்பவே உலகம் அழிய‌ ஆரம்பித்துவிட்டது.

10. பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய‌ நினைக்கும் பெற்றோர்கள், அவர்களின் ஜாதகத்தை ஆராய்வதற்கு முன்னர் அவர்களின் செல்போனை ஆராய்ந்து பார்த்தாலே பாதி வேலை மிச்சமாகும்.

4
Average: 4 (1 vote)